இந்தியாவில் திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்.. என்ன காரணம்? தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியுமா?
சென்னை: ஓமைக்ரான் வகை வைரஸ் மாதிரிகள் வேகமாக பரவும் தன்மை கொண்டவை என்பதால், இந்தியாவில் திடீரென கொரோனா பரவல் அதிகரிக்க ஓமைக்ரான் திரிபுகளே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஓமைக்ரான் கொரோனா வைரஸ் காரணமாக மூன்றாம் அலை ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக லேசான கொரோனா பாதிப்பையே ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜூன் மாதம் தொடங்கியது முதல் நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒருநாளில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை எட்டியுள்ளது.

பாதிப்பு அதிகரிக்க காரணம்?
இந்தியாவில் பிஏ2 வகை ஓமைக்ரன் வைரஸ் வேகமாக பரவிய நிலையில், இப்போது பிஏ4 மற்றும் பிஏ5 வகை கொரோனா வைரஸ் இன்னும் தீவிரமாக இந்தியாவில் பரவி வருகிறது. இந்த வகை ஓமைக்ரான் வைரஸ், மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக தாக்குவதாகவும், இதுவே சர்வதேச அளவில் வைரஸ் பரவல் அதிகரிக்க காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் BA.2.75 என்ற புதிய ஓமைக்ரான் வகை கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் திடீரென கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கப்பதற்கு புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தடுப்பூசி மூலம் தடுக்க முடியுமா?
இதனிடையே கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசி இறப்பை கட்டுப்படுத்தவும், கொரோனா பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை தடுக்கவும், அதீத பாதிப்பை கட்டுப்படுத்தவதற்காகவே செலுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தடுப்பூசிகள் பாதுகாக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் பாதிப்பு ஏற்படுமா?
இதனிடையே பிஏ4 மற்றும் பிஏ5 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், பிஏ2.75 வகை பாதிப்பு மீண்டும் வருமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதற்கு, ஒவ்வொரு வகை வைரஸ்களும் ஒவ்வொரு பிரிவு என்பதால், கொரோனா வைரஸால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களும் மீண்டும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதீத பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கொரோனா தடுப்பூசிகள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நெறிமுறைகள்
கொரோனா வைரஸில் இருந்து ஓமைக்ரான் வைரஸ், ஓமைக்ரான் வைரஸில் இருந்து புதிய வகை திரிபுகள் என மாற்றி மாற்றி வைரஸ் கண்டறியப்படுவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது, சுகாதாரமாக இருப்பது, பெரிய அளவில் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications