ஒரு சம்பவம்.. 2 கணக்கு.. சவுத் ‘வலிமை’.. மோடிக்கு கௌரவம்.. அதிரடி காட்ட ரெடி.. ஓபிஎஸ் டீம் பரபர!
மதுரை : பிரதமர் மோடி, முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், தங்கக் கவசத்தைப் பெற்று தங்கள் பலத்தை நிரூபிக்க ஓபிஎஸ் தரப்பு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தேவர் தங்க கவசத்தை வங்கியில் இருந்து யார் பெற்று தேவர் குருபூஜை விழா கமிட்டியாரிடம் ஒப்படைப்பது என்பதில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், டெல்லியின் பார்வையும் தேவர் குருபூஜையை நோக்கி விழுந்துள்ளதால், தங்கள் பலத்தைக் காட்டி, மோடியின் ஆதரவை தன் பக்கம் பெறுவதற்கான முயற்சிகளில் ஓபிஎஸ் டீம் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தென்மாவட்டங்களில் தங்களுக்கு இருக்கும் வலிமையைக் காட்டவேண்டும், டெல்லியின் ஆதரவையும் உறுதிசெய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் ஒரு பிளானை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக அரசியல்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்து, மறைந்த அக்டோபர் 30ஆம் தேதி அன்று ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கொண்டாடப்படுவது வழக்கம். ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, கடந்த 2014ஆம் ஆண்டு 14 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு வழங்கி முக்குலத்தோர் சமூக மக்களிடையே வரவேற்பைப் பெற்றார். இது தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி திரளவும் பயன்பட்டது.

ஓபிஎஸ் பொறுப்பில்
தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜையன்று அணிவிக்கப்படுகிறது. இந்த தங்க கவசத்திற்கான முழு பொறுப்பும் அதிமுக பொருளாளர் வசம் வழங்கப்பட்டது. அதிமுக பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் லாக்கரில் இருந்து தங்கக் கவசத்தை பெற்று பசும்பொன்னில் விழா கமிட்டியாரிடம் கொடுத்து அணிவிப்பது வழக்கமாக இருக்கிறது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல்
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈபிஎஸ் தரப்பால் பொதுக்குழு கூட்டப்பட்டு அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், தான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என ஓபிஎஸ் கூறி வருகிறார். இதனால், இந்த முறை அதிமுக பொருளாளர் என்ற அடிப்படையில் வங்கியில் இருந்து தங்கக் கவசத்தை தேவர் சிலைக்கு அணிவிக்கப் போவது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது.

ஈபிஎஸ் டீம் முயற்சி
ஈபிஸ் தரப்பு பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கியில் தங்கக் கவசத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி தங்க கவசத்தை பெற்று தேவர் சிலைக்கு சிறப்பு செய்து முக்குலத்தோர் சமூக மக்களிடம் நற்பெயரை வாங்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மும்முரமாக உள்ளது. இதன் மூலம் தென் மாவட்டங்களில் பலம் பெறலாம் எனக் கணக்கு போட்டிருக்கிறார் ஈபிஎஸ்.

காய்நகர்த்தும் ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரோ, இந்த முறையும் ஓபிஎஸ்ஸே தேவர் நினைவிடத்துக்கு தங்கக் கவசத்தை கொண்டு வந்து அணிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதற்காக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர். வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள தேவரின் தங்க கவசத்தை ஒப்படைக்க கோரி ஓபிஎஸ் தரப்பின் சார்பில் முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன், எம்.பி தர்மர் ஆகியோர் வங்கி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

கௌரவம்
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் சூழலால் இந்த ஆண்டு தேவர் ஜெயந்திக்கு யார் தங்க கவசத்தை பெற்றுத் தருவது என்பதிலும் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கைக் காட்ட ஓபிஎஸ்ஸும், அதே சமூகத்தைச் சேர்ந்த ஈபிஎஸ் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே இது ஒரு கௌரவ பிரச்சனையாக மாறியுள்ளது.

மோடி பார்வை
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தேவர் குருபூஜைக்கு வர இருப்பதால், இந்த போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மோடி பசும்பொன்னுக்கு வருகை தர இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் வலுவாக காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜக, இதனை சிறந்த வாய்ப்பாக கருதுகிறது.தென் மாவட்டங்களில் பெரும் வாக்கு வங்கியைக் கொண்ட முக்குலத்தோர் சமூகத்தினரை கவர் செய்வதற்காக பிரதமர் மோடி வரவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் மூவ்
இந்நிலையில் தான் தேவர் தங்க கவசத்தை இந்த முறையும் தானே பெற்றுக் கொடுத்து பிரதமர் மோடி முன்னிலையில் மாஸ் காட்ட இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக சில முக்கியமான நகர்வுகளில் ஓபிஎஸ் தரப்பு ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணைய நிலவரப்படி இன்றைய நிலையில் அதிமுக பொருளாளராக ஓ.பன்னீர்செல்வமே இருக்கிறார். சமீபத்திய மாறுதல்கள் எதுவும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. இதனை ஆதாரமாக வைத்து தானே அதிகாரப்பூர்வ பொருளாளர் என நிரூபித்து தங்க கவசத்தை பெற ஓபிஎஸ் திட்டமிட்டு வருகிறாராம்.

மோடிக்கு மரியாதை - மெகா பிளான்
மேலும், பாஜக தலைமையின் ஆதரவையும் தனக்கு பெறும் நோக்கத்தில் இன்னொரு முயற்சியையும் முன்னெடுப்பதாக கூறப்படுகிறது. அதாவது, தங்க கவசத்தை ஓபிஎஸ் பெற்று, பிரதமர் மோடி கையாலேயே தேவர் குருபூஜையின்போது வழங்கலாம் என திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் பிரதமர் மோடியின் 'சவுத்' பிளானுக்கு தான் உதவிகரமாக இருப்பதால், டெல்லியின் நிலையான ஆதரவு தனக்கே உறுதியாகும் என ஓபிஎஸ் கணக்கு போட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

2 கணக்கு
இதன்மூலம், தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியிலும் தனக்கு இருக்கும் ஆதரவை அதிகரித்துக்கொள்ள முடியும், அது அரசியல் ரீதியில் பலன் தரும். அதேசமயம், பிரதமர் மோடியை கௌரவப்படுத்தி, முக்குலத்தோர் சமூகத்தினர் இடையே மரியாதை ஏற்பட உதவுவதால், டெல்லி தலைமையின் ஆதரவும் நிச்சயம் தனக்கே கிடைக்கும், ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என ஓபிஎஸ் திட்டம் போட்டு, அதற்கான வேலைகளில் ஈடுபடத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
எடப்பாடி பழனிசாமி போட்ட 3 கண்டிஷன்? தஞ்சையில் தினகரன் சொன்ன 1 விஷயம்.. உடைந்தது அரசியல் மர்மம் -
கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கதி அதோ கதிதான்.. புட்டுபுட்டு வைத்த அதிமுக முன்னாள் நிர்வாகி












Click it and Unblock the Notifications