ஓ.. திறமைக்கான பரிசுதான் அமைச்சர் பதவி? சத்தமின்றி உதயநிதி ஸ்டாலின் சாதித்தது என்ன தெரியுமா? லிஸ்ட்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை காலை நடைபெற உள்ள விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். இதன் மூலம் தமிழக அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் இந்தப் பட்டியலில் சேர்த்தால் அமைச்சரவை எண்ணிக்கை 35 ஆகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கடந்துவந்த பாதையைக் கொஞ்சம் விரிவாகத் திரும்பிப் பார்க்கலாம்.

திரைத்துறையில் உதயநிதி:
இந்த அரசியல் அடையாளம் எல்லாம் உதயநிதிக்குப் பின்னால் வந்தது. அவரது முதல் அடையாளம், தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர். அவரது 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' கம்பெனி கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. எடுத்த வேகத்திலேயே தமிழ் சினிமாவின் பெரிய ஹீரோவான விஜய்யை வைத்து 'குருவி' படத்தைத் தயாரித்தார். சூர்யா நடத்த 'ஆதவன்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் பின் தோன்றினார். அதன்பிறகு 'ஒரு கல் ஒரு கண்ணாடி' மூலம் 2012இல் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு கலகத்தலைவன் வரை பல்வேறு படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
பல திரை நட்சத்திரங்களைப்போல உதயநிதி ஸ்டாலினும் சென்னை லயோலா கல்லூரியின் மாணவர். அங்கே பி.காம். படித்தார். கல்லூரிக் காலங்களில் கிருத்திகாவைக் காதலித்து மணம் புரிந்தார். இவர்கள் இருவருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. இந்தத் தம்பதிக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி 45 வயதை நிறைவு செய்தார் உதயநிதி ஸ்டாலின்.
இவரது தாத்தா மு.கருணாநிதியும் அண்ணா மறைவுக்குப் பிறகு இதே 45 வயதில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் என்பது சட்டென்று நினைவுக்கு வரும் தகவல். இவரது வருகையைச் சிலர் வாரிசு அரசியல் என்று குறிப்பிட்டு வருகின்றனர். அதே சமயம் பாஜகவில் எந்தளவுக்கு வாரிசு அரசியல் உள்ளது என்று பலர் பதிலடிக் கொடுத்து வருகின்றனர்.

உதயநிதி அரசியல் வருகை
இந்நிலையில் உதயநிதியின் கடந்த கால அரசியல் செயல்பாடு குறித்து சில விவரங்களை இங்கே குறிப்பிடுவது அவசியமாகிறது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த ஊராட்சி சபைக் கூட்டங்களைப் பல மாவட்டங்களில் திறம்பட நடத்தினார். தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஏறக்குறைய 39 தொகுதிகளில் வெற்றிவாய்ப்புக்கு உதயநிதியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையிலிருந்தது. அதன் தொடர்ச்சியாக 2019ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். சட்டமன்றத் தொகுதிக்குச் சராசரியாக 10 ஆயிரம் பேர் என மொத்தம் 25 லட்சம் புதிய உறுப்பினர்களை இளைஞர் அணியில் சேர்ப்பதற்கான பணியை ஒருங்கிணைத்தார்.

3.5 லட்சம் இளைஞர்கள்
திறமையாக பணியாற்றிய 3.5 லட்சம் இளைஞர்களை இளைஞர் அணி நிர்வாகிகளாக நியமித்து, திமுகவை இளைஞர்கள் மத்தியில் அதிகமாகக் கொண்டுபோய் சேர்த்தார். இவரது தீவிர செயல்பாட்டுக் கவனம் பெற்றது. ஆகவே 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களத்தில் இளைஞர்கள் அதிகமாகத் தேர்தல் பணியாற்றினர். மாநிலம் முழுவதும் தூர்ந்து கிடந்த நீர்நிலைகளை இளைஞர் அணியினர் தூர்வாரவேண்டும் என அறிவுறுத்தினார். அந்த முயற்சியால் நூற்றுக்கணக்கான ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டன. மேலும் கொரோனா பேரிடரில் வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு இளைஞர் அணி சார்பாக நலத்திட்டங்களை ஒருங்கிணைத்தார். மருந்துகள், உணவுப் பொருள்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளைக் கொண்டு போய் சேர்த்தார்.

கருணாநிதி சாதனையை முறியடித்த உதயநிதி
இந்தச் செயல்பாடுகளைவிட ஹைலைட் ஆக, 2021 சட்டமன்றத் தேர்தலில் மத்திய அரசை விமர்சிக்கும் தொனியில் மதுரையில் முடங்கிக் கிடக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் பொய்யான அறிவிப்பை மக்களுக்கு எடுத்து விளக்கும் விதமாக 'ஒற்றைச் செங்கல்' எடுத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் வலம் வந்தார். அவரின் தேர்தல் யுக்தி, மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தத் தேர்தலில் திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தேர்தலில் களம் இறக்கப்பட்டார். அதில் அவர் மொத்தம் 91,776 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 68,133 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். கடந்த 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதி முதன்முறையாகப் போட்டியிட்டார். அப்போது அவர் 35,784 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2001ஆம் ஆண்டு 4,834 வாக்குகள் வித்தியாசத்திலும், 2006ஆம் ஆண்டு 8,526 வாக்குகள் வித்தியாசத்திலும் கருணாநிதி வெற்றி பெற்றார். ஆனால் அவரைவிட உதயநிதி ஸ்டாலின் 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கடந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் மொத்த வாக்குகள் 2,34,038 ஆகும். அதில் பதிவான வாக்குகள் 1,35,417. இதில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வாக்குகள் 91,776 ஆகும்.

சென்னை செஸ் ஒலிம்பியாட்-இல் உதயநிதி
தமிழ்நாட்டின் பெருமையை உலகத்திற்கு உணர்ந்தும் போட்டியாகச் சென்னையில் நடைபெற்ற 'செஸ் ஒலிம்பியாட்' குழுவில் இடம்பெற்றார். அதற்கான இயக்குநர் விக்னேஷ் சிவனை வைத்து புதியவிதமான விளம்பர யுக்திகளைக் கையாண்டார். அவரது விளம்பரங்கள் பரவலாகப் பேசப்பட்டது. குறிப்பாக நேப்பியர் பாலத்தை செஸ் போர்டு போல வண்ணம் தீட்டி, முதலமைச்சர் ஸ்டாலினை வைத்து விளம்பரப்படுத்தினார். அது பலரது பாராட்டைப் பெற்றது.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிற்பாடும் இந்த ஆட்சிக்கு 'திராவிட மாடல்' ஆட்சி என பெயர் வைத்தார். அதை முன்மாதிரிக்காகக் கொண்டு திமுக இளைஞர் அணி சார்பாக திமுகவின் கொள்கைகளை, போராட்ட வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் நோக்குடன், 'திராவிட மாடல் பயிற்சிப் பாசறை'களை தொகுதிவாரியாக நடத்தினார். அடுத்தபடியாக கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த முன்னோடிகளைக் கவுரவிக்கும் வகையில், 'இனி நான் எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் அங்குக் கட்சியின் முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நிச்சயம் இடம்பெறும்' என அறிவித்து அதைச் செயல்படுத்தினார். தமிழகத்தில் உள்ள இளைஞர்களை வீடுவீடாக சென்று அணியில் சேர்க்கும் திட்டமாக 'இல்லந்தோறும் இளைஞர் அணி' என்ற புதிய முகத்தைக் கட்சிக்குள் எடுத்து வந்தார். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக இளைஞரணி செயலாளராகச் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, மிகச்சிறப்பாக பணியாற்றிய மாவட்ட அமைப்பாளர்கள் 9 பேரை இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக நியமித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்!












Click it and Unblock the Notifications