தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வெயிலா? மழையா? - முழு ரிப்போர்ட்
சென்னை: மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் வட தமிழக மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
Recommended Video
கடந்த இரண்டு நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியாவில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்வதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. 9 மாநிலங்களில் கடந்த 122 வருடங்களில் ஏப்ரல் மாதங்களில் பதிவானதை விட அதிக வெப்பநிலை இந்த ஏப்ரல் மாதம் பதிவாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்தத் ஏப்ரல் மாதத்தில் பதிவான வெப்பநிலைதான் கடந்த 122 வருடங்களில் பதிவான மிக அதிக வெப்பநிலை ஆகும்.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
தென்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 3, கூடலூர் பஜார் (நீலகிரி) 2, தேவலா (நீலகிரி) 1, தளி (கிருஷ்ணகிரி) 1.
அதிகபட்ச வெப்பநிலை:
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.முக்கியமாக வடக்கு தமிழக மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மழை நிலவரம்:
01.05.2022, 02.05.2022: தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்.
03.05.2022 முதல் 05.05.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
05.05.2022: தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications