நவம்பர் 1 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் இயங்காது... உடனே செய்ய வேண்டியது என்ன?
சென்னை: ஆண்ட்ராய்டு 4.0.4 மற்றும் அதற்கு முந்தைய ஆண்ட்ராய்டு வெர்சன்கள் உள்ள பழைய ஸ்மார்ட் போன்களில், வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், வாட்ஸ் அப் செயலி இயங்காது என்று வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கோடிக் கணக்கானோர் வாட்ஸ் அப் ஆப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆப் தான் வீடியோ, ஆடியோ, டாக்குமெண்ட், மெசெஜ் தகவல்களை அனுப்புவதற்கு உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அடிக்கடி அப்டேட் செய்யப்பட்ட வெர்சனில் வாட்ஸ் அப் இயங்குகிறது. அதேநேரம் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு வெர்சனுக்கு ஏற்ப தகவல் தொழில்நுட்ப வசதிகளை வாட்ஸ் அப் மாற்றி வருகிறது. அதேநேரம் பழைய ஆண்ட்ராய்டு செல்போன்களில் இயங்காத வகையில் புதுப்பித்தும் வருகிறது. இப்படி பழைய ஆண்ட்ராய்டு போன்கள் பலவற்றில் தற்போது வாட்ஸ்அப் இயங்குவது இல்லை.

ஸ்மார்ட்போன்கள்
இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், ஆண்ட்ராய்டு 4.0.4 மற்றும் அதற்கு முந்தைய ஆண்ட்ராய்டு வெர்சன்கள் உள்ள பழைய ஸ்மார்ட் போன்களில், வாட்ஸ் அப் ஆப் செயல்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, ஆண்ட்ராய்டு ஓ.எஸ்., 4.1 மற்றும் அதற்கு மேல், ஐ.ஓ.எஸ்., 10 மற்றும் அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட் போன்களில் மட்டுமே வாட்ஸ் அப் செயலி செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. லேட்டஸ்ட் வெர்ஷன்களை ஆதரிக்கும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே வாட்ஸ் அப் செயலியை இனி பயன்படுத்த முடியும்.

சாம்சங்
எந்தெந்த போன்களில் இனி வாட்ஸ் அப் இயங்காது, ஆப்பிள் ஸ்மார்ட்போன்களான iPhone 6S, iPhone 6S Plus, Apple iPhone SE இல் இனி வாட்ஸ் அப் இயங்காது. சாம்சங் ஸ்மார்ட்போன்களில் Samsung Galaxy Trend Lite, Galaxy SII, Galaxy Trend II ஆகியவற்றில் வாட்ஸ் அப் செயல்படாது.

எந்த போன்கள்
எல்.ஜி., ஸ்மார்ட்போன்களில் LG Lucid 2, Optimus L5 Dual, Optimus L4 II Dual, Optimus F3Q, Optimus F7, Optimus F5, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5, Optimus L5 II, Optimus L3 II, Optimus L7, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, Enact, Optimus F3, Optimus L4 II, Optimus L2 II, Optimus Nitro HD and 4X HD போன்ற போன்களில் வாட்ஸ் அப் இயங்காது.

ZTE ஸ்மார்ட்போன்
ZTE ஸ்மார்ட்போன்களில் ZTE Grand S Flex, Grand X Quad V987, ZTE V956, Grand Memo போன்ற போன்களில் வாட்ஸ் அப் இயங்காது. ஹுவாவெய் ஸ்மார்ட்போன்களில் Huawei Ascend G740, Ascend D Quad XL, Ascend Mate, Ascend P1 S, Ascend D2, Ascend D1 Quad XL போன்களில் வாட்ஸ் அப் இயங்காது.

எப்படி மாற்றுவது
சரி ஒருவேளை நீங்கள் மேற்கண்ட செல்போன் வைத்திருக்கிறீர்கள் என்றால்உங்கள் வாட்ஸ் அப் சாட்களை எப்படி பாதுகாப்பாக சேமிப்பது என்பதை இப்போது பார்ப்போம். ஆண்ட்ராய்டு 4.0.4 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பில் இயங்கும் சாதனத்திற்கு உங்கள் வாட்ஸ்அப்பை மாற்ற வேண்டும்.

பேக்கப் செய்யலாம்
ஒருவேளை உடனே முடியாது என்றால் நீங்கள் WhatsApp இல் சென்று உங்கள் சாட்டிங், வீடியோ மற்றும் புகைப்படம் மற்றும் டாக்குமெண்ட்களை எக்ஸ்போர்ட் செய்து வைத்துக்கொள்ளலாம். அதற்கு நீங்கள் WhatsApp இல் settingsஐ கிளிக் செய்து > Chats > Chat backup > Back up to make a backup அல்லது எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம். எந்த குரூப் அல்லது எந்தெந்த நபரின் சாட்டிங் வேண்டும் என்பதை தேர்வு செய்து அக்டோபர் 31ம் தேதிக்குள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications