தொடங்கியது சந்திர கிரகணம்! தமிழகத்தில் எப்போது தொடங்குகிறது? எங்கெல்லாம் ’ரத்த நிலா’வை பார்க்கலாம்?
சென்னை : தமிழகத்தில் சென்னையில் சந்திர கிரகணம் மாலை 5:39 மணிக்கு தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் எங்கெல்லாம் 'ப்ளட் மூன்' எனப்படும் ரத்த நிலாவை பார்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே பூமி வரும்போது அதன் நிழலில் நிலவு மறைந்து விலகும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. சந்திரன் பூமி சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது சந்திர கிரகணம் நிகழும்.
இந்த கிரகணத்தின் போது நிலவு சிகப்பு நிறத்தில் மாறுவதால் பிளட் மூன் என அழைக்கப்படுகிறது. சந்திர கிரகணத்தின் போது சந்திரனை நோக்கி வரும் சூரிய ஒளி பூமியின் மீது சிதறடிக்கப்படுவதால் நிலவின் நிறம் சிகப்பு நிறமாக மாறுகிறது இதை இரத்த நிலா அல்லது பிளட் மூன் என அழைக்கப்படுகிறது.

சந்திர கிரகணம்
இன்று மாலை சந்திர கிரகணம் தொடங்கிய நிலையில் ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லாண்டிக், பசிபிக், இந்திய பெருங்கடல், வடகிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் சந்திர கிரகணம் முழுமையாக தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் சந்திர கிரகணம் தென்படாது

கிழக்கு பகுதிகள்
அதே நேரத்தில் கொல்கத்தா உள்ளிட்ட கிழக்கு பகுதிகளில் இதன் இறுதி நிலைகளை காணலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் 4.52 மணிக்கு சந்திரன் உதயமாகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் மேகமூட்டம் இல்லாமல் இருந்தால் ஐந்து மணி வாக்கில் முழு சந்திர கிரகணத்தை பார்க்கலாம். சந்திர கிரகணம் முடியும் இறுதி நிகழ்வுகளை கிழக்குப் பகுதி மக்கள் பார்க்கலாம் என வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில் பார்க்க முடியுமா?
இந்நிலையில் சென்னையில் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை சந்திர கிரகணம் மாலை 5:39 மணிக்கு தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை பார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், மேகமூட்டம் உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

எப்படி பார்ப்பது?
தற்போது நிகழ்ந்து வரும் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்பதும், சிறப்பு உபகரணங்கள் ஏதும் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகத்தில் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் நிலையில், தொலைக்காட்சிகள் மற்றும் இணைய தளங்களில் சந்திர கிரகணத்தை பார்த்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் 5.20க்கு மேகமூட்டமில்லாமல் இருந்தால் இதனைக் காண வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications