"பூனைக்குட்டி" வெளியே வருகிறது.. "தலைவரிடம்" இருந்து பறந்த இன்ஸ்ட்ரக்ஷன்.. கப்சிப் ஆன ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இரு தரப்பிலும் இருவிதமான கணக்கு போடப்பட்டு வருகிறது
சென்னை: அதிமுகவில் 3 முக்கிய விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. நாளுக்கு நாள் இந்த பிரச்சனை அதிகமாகி கொண்டே போகும் நிலையில், பரபரப்புகளும், கவலைகளும் தொண்டர்களிடம் கூடி வருகிறது.
Recommended Video
அதிமுக 2 ஆகி பிரிந்துவிட்டது.. இதில் மெஜாரிட்டியுடன் எடப்பாடி திகழ்கிறார்.. ஆனால், எடப்பாடி டீமுக்குள்ளேயே புகைச்சல்கள் கிளம்பிவிட்டன.
மூத்த தலைவர் பொன்னையனின் ஆடியோ பதிவு மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.. மிமிக்ரி என்ற ஒரே வார்த்தையில் பொன்னையன் முடித்து கொண்டாலும், அந்த ஆடியோவின் உண்மைகள் பல விஷயங்களை பதிவிட்டு போயுள்ளது..

விடுங்க.. தேவையில்லாதது
இந்த பரபரப்புக்கு நடுவில்தான், அமைச்சர் பொன்னையனுக்கு அதிமுகவில் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பொன்னையன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வந்தார்... அப்போது அதிமுகவில் புதிய பொறுப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து வாழ்த்தும் பெற்றுக்கொண்டார். அப்போது வெளிவந்த ஆடியோவிற்கு பொன்னையன் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடி, இந்த பிரச்சனை தேவையில்லாதது, இனிமேல் இப்படி யாரிடமும் பேச கூடாது என்று அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

வைத்திலிங்கம்
இதற்கு நடுவில், ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்னொரு குண்டை தூக்கிப்போட்டு விட்டு போயுள்ளார்.. "பொன்னையன் ஆடியோ கேட்டு இருப்பீங்க.. கூடிய சீக்கரம் பல ஆடியோக்கள் வரும்" என்றார்.. இது எடப்பாடி தரப்பை மேலும் கிலிக்கு ஆளாக்கி உள்ளதாம். மெஜாரிட்டி தன்பக்கம் இருப்பதாக எடப்பாடி பெருத்த நம்பிக்கையுடன் இருக்கும்போது, இந்த ஆடியோக்கள் வெளிவந்தால்தான், எத்தனை பூனைக்குட்டிகள் வெளியே வரப்போகின்றன என்பது தெரியவரும் என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
அதேபோல, இன்னொரு விஷயமும் கட்சிக்குள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? எப்படி வாக்களிப்பது? என்பதெல்லாம் குறித்துவிவாதிக்க அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டத்தை 17-ந்தேதி கூட்டவிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவில் அதிகார மோதலில் அக்கட்சியின் அலுவலகமும் தமிழக அரசால் இழுத்து மூடப்பட்டுவிட்டது.. அதனால், அந்த கூட்டத்தை எங்கு நடத்துவது? என்பது இன்னும் முடிவாகவில்லை... ஆனால், எங்கு நடந்தாலும், ஓபிஎஸ், வைத்தியலிங்கம் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படாது என்று எடப்பாடி தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாம்.

இன்ஸ்ட்ரக்ஷன்
அதிமுகவிலிருந்து இவர்களை எடப்பாடி நீக்கினாலும், அவர்கள் இப்போதும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தான். ஆனால், கட்சியை விட்டு நீக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு எந்த இன்ஸ்ட்ரக்ஷனையும் தரத்தேவையில்லை என்கிறாராம் எடப்பாடி... அதேபோல, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று உரிமையை நிலை நாட்டிவரும் ஓபிஎஸ், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விவாதிக்க எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்க யோசித்தாராம்.

மனோஜ்
ஆனால், வைத்தியலிங்கமும், மனோஜ் பாண்டியனும், எம்எல்ஏக்களுக்கு நீங்கள் அழைப்பு விடுத்து யாருமே வரவில்லை என்றால், அது உங்களின் இமேஜை பாதிக்கும். அதனால், எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டலாம் என நினைப்பதே தவறு என்று சொல்லியிருக்கிறார்கள்... ஏற்கனவே கடந்த மாதம் இப்படித்தான் ஒரு சிக்கல் எழுந்தது.. ஒற்றை தலைமைக்கு எத்தனை பேர் ஆதரவு தருகிறார்கள் என்பதை, ஓட்டளிப்பு மூலம் நிரூபிக்கலாம் என்று கட்சிக்குள் முடிவு செய்யப்பட்டதாம்.. ஆனால், இதை சில மூத்த தலைவர்களே வேண்டாம் என்று ஓபிஎஸ்ஸிடம் சொன்னார்கள்.

வைத்திலிங்கம்
ஓட்டெடுப்பு என்று இறங்கினால், எடப்பாடிக்குதான் நிறைய ஆதரவு கிடைக்கும்.. உங்கள் பக்கம் ஆதரவு குறைந்துவிட்டால், இருக்கும் இமேஜ்கூட இன்னும் குறைந்துவிடும்.. கட்சிக்குள் செல்வாக்கும் போய்விடும்.., அதனால், ஓட்டெடுப்புக்கு ஒப்புக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி அந்த விஷயத்தையே ஆஃப் செய்துவிட்டார்களாம்.. அதற்கு பிறகுதான் ஓபிஎஸ், சட்டரீதியான நடவடிக்கைக்கு தீவிரமானார் என்கிறார்கள்.. இப்போதும், சட்டத்தையும், பாஜக மேலிடத்தையும், தேர்தல் ஆணையத்தையும் மட்டுமே ஓபிஎஸ் நம்பி உள்ளபோது, அவருக்கான ஆதரவாளர்கள் குறைவு என்பதையும் அவர் நன்கே உணர்ந்துள்ளாராம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications