Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி "பச்சை கொடி".. பாஜக சப்போர்ட் இவருக்குத்தான்? மொத்தமாக மாறும் அதிமுக ஆட்டம்! நோட் பண்ணீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ள நிலையில்.. இந்த விவகாரத்தில் நேற்று வரை கருத்து தெரிவிக்காமல் பாஜக மௌனமாக இருந்தது. கதையில் மெயின் ஹீரோ எங்கப்பா என்று எல்லோரும் தேடும் அளவிற்கு பாஜக இதில் படுமௌனமாக இருந்தது.

பாஜகவின் 8 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் அண்ணாமலையும் பிசியாக இருந்ததால்.. அதிமுக விவகாரங்கள் பற்றி இவர்கள் பெரிதாக வாயை திறக்கவே இல்லை.

அண்ணாமலை என்ன சொன்னார்?

அண்ணாமலை என்ன சொன்னார்?

சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை கூட.. அதிமுக உட்கட்சி விவகாரம் அது. அவர்களின் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட்டது இல்லை. இனி தலையிடவும் மாட்டோம். அவர்களே கட்சி ரீதியாக முடிவுகளை எடுக்கட்டும் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். இதனால் பாஜக இதில் இந்த முறை எந்த தலையீடுகளையும் செய்யாது என்றே எதிர்பார்க்கப்பட்டது.

யாரை ஆதரிக்கிறது?

யாரை ஆதரிக்கிறது?

ஆனால் ஓபிஎஸ் தரப்பில் டெல்லி தரப்பிடம் ஆதரவு கேட்கப்பட்டதாக செய்திகள் வந்தன. அதாவது டெல்லியில் இருக்கும் பாஜக தலைகளை ஓபிஎஸ் உதவிக்கு அணுகியதாக கூறப்பட்டது. இதுநாள் வரை பாஜகதான் அதிமுக மோதலை சமாதானம் செய்துள்ளது. அதேபோல் இந்த முறையும் சமாதானம் செய்ய வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் அணுகியதாக கூறப்பட்டது. ஆனால் எடப்படியோ.. டெல்லி இந்த விவகாரத்தில் தலையிட கூடாது என்று கட் அண்ட் ரைட்டாக மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.

 திடீரென நயினார்

திடீரென நயினார்

இதனால் எடப்பாடி - ஓபிஎஸ் இருவரில் பாஜக யாரை ஆதரிக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்த இயக்கமாக செயல்பட வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கேபி இராமலிங்கம் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்

 ஒற்றை தலைமை

ஒற்றை தலைமை

அப்போது அவர் கூறுகையில் அதிமுக இயக்கம் மாபெரும் இயக்கம் மறைந்த எம்ஜிஆர் மாண்புமிகு அம்மா எளிய மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அண்ணா திமுக அம்மாவின் மறைவிற்குப் பிறகு சில மாற்றங்கள் ஏற்பட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவன் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் எங்களுடைய கட்சியின் எண்ணமும் அதுவாகத்தான் இருக்கிறது என்றார் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை எல்லாம் விட்டுவிட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்

ஒற்றை தலைமை

ஒற்றை தலைமை

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் சரி. ஒற்றை தலைமை கோரிக்கை சரிதான். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் நான் மிகவும் மதிக்கக்கூடிய மனிதர் இந்த கழகம் ஒற்றுமையாக செயல்பட அவர் பேச வேண்டும் என்றார் போஸ்டர்கள் அடிப்பதை நிறுத்திவிட்டு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்றார் நயினார் நாகேந்திரன்.

 விமர்சனம் செய்து வந்தார்

விமர்சனம் செய்து வந்தார்

எடப்பாடி, ஓபிஎஸ் இருவரையும் விமர்சனம் செய்து வந்த நயினார் நாகேந்திரன் திடீரென ஒற்றை தலைமை தேவை என்று பேசி இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒற்றை தலைமை வேண்டும் என்று எடப்பாடி சொல்லி வருகிறார். வேண்டாம் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறார். அப்படி என்றால் எடப்பாடி பக்கம் டெல்லி தலைமை சாய்கிறதோ.. அவருக்கு ஆதரவு தருவதற்கான கிரீன் சிக்னல்தான் இந்த பேச்சோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    Sasikala உடன் அணி சேர்வது பற்றி பேசினாரா OPS? Aavin vaidyanathan பரபரப்பு பேட்டி *Politics
    இப்போது ஏன்?

    இப்போது ஏன்?

    பாஜக சப்போர்ட் எடப்பாடிக்குத்தானோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி கொஞ்சம் வலுவாக இருந்தால்தான் அதிமுக கட்சியும் வலுவாக இருக்கும். இது அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு சாதகமாக இருக்கும். முக்கியமாக கொங்கு மண்டலத்தில் எடப்பாடி உதவியுடன் பாஜக வளர முடியும். இதை மனதில் வைத்து பாஜக எடப்பாடியை ஆதரிக்க திட்டமிட்டுள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. நயினார் நாகேந்திரன் திடீரென ஒற்றை தலைமைக்கு ஆதரவாக பேசி உள்ளது அதிமுக ஆட்டத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. எடப்பாடிக்கு டெல்லி தரும் கிரீன் சிக்னலா இது என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+