• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வேடந்தாங்கல் சரணாலயத்தின் தலைக்கு வந்த ஆபத்தை தலைப்பாகையுடன் நிறுத்திய வெண்ணிலா? யார் இவர்?

|

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சன் ஃபார்மா என்ற மருந்து நிறுவனத்தால் ஏற்பட இருந்த ஆபத்தை சட்டப் போராட்டம் நடத்தியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் வெண்ணிலா. யார் இவர்?

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது உலக புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும்.

இந்த பறவைகளுக்காக மக்கள் தீபாவளி, திருவிழாக்காலங்களில் பட்டாசு வெடிப்பதையே நிறுத்திவிட்டனர். அவ்வாறிருக்கும் நிலையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் அருகே உள்ளது சன் ஃபார்மா என்ற மருந்து நிறுவனம் தனது தொழிற்சாலையின் எல்லையை விரிவுப்படுத்த தேசிய வனவிலங்கு வாரியத்திடம் கடந்த மே மாதம் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தது.

வெண்ணிலா

வெண்ணிலா

இந்த நிறுவனம் தனது தொழிற்சாலையை விரிவுப்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தால் பறவைகளுக்கு ஆபத்து நேரிடும் என நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் வெண்ணிலா. அதிலும் வெற்றியும் கண்டார். யார் இவர் என்பதை பார்ப்போம். வெண்ணிலா வேறு யாருமில்லை, நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் மாநில செயலாளர் ஆவார்.

6 ஆண்டுகள் ஆய்வு

6 ஆண்டுகள் ஆய்வு

இவரது சொந்த ஊர் தேவக்கோட்டை. எனினும் கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது ஆர்வம் அதிகம். அதனால் அது தொடர்பான படிப்புகளையே படித்தார். ஆம். அண்ணா பல்கலைக்கழகத்தில் எம் டெக் உயிரி தொழில்நுட்பம் படித்த வெண்ணிலா, குப்பை மேலாண்மையில் 6 ஆண்டுகள் ஆய்வும் செய்துள்ளார்.

ஈழப் பிரச்சினை

ஈழப் பிரச்சினை

இவரது தாய் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வந்தவர். ஈழப்பிரச்சினை என்பது அங்கிருக்கும் ஒவ்வொரு தமிழரது பிரச்சினையாகும். அது போல் தனது தாய்க்கான பிரச்சினையை தனக்கான சொந்த பிரச்சினையாகவே கருதினார் வெண்ணிலா. அப்போதுதான் இனப்படுகொலைக்கு எதிராகவும் ஈழப்பிரச்சினைக்காகவும் நாம் தமிழர் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து தீவிரமாக போராடியது.

கட்சியில் சேர விருப்பம்

கட்சியில் சேர விருப்பம்

இதை பார்த்து வியந்த வெண்ணிலா, அக்கட்சியில் இணைய விரும்பினார். மேலும் இயற்கை மீது இருந்த ஆர்வம் காரணமாக வெண்ணிலா தனது படிப்பை மட்டும் தேர்வு செய்யவில்லை. அவர் இணைந்து போராட நாம் தமிழர் கட்சியையும் தேர்வு செய்தார். இக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் சுற்றுச்சூழலியலாளர். இவர் எப்போதும் பேசினாலும் மண்ணையும் இயற்கையையும் பாதுகாப்பது குறித்தே பேசுவதை பார்த்த வெண்ணிலா, தனக்கான இடம் இதுதான் என்பதை முடிவு செய்தார்.

  EIA 2020 | EIA என்றால் என்ன? | EIA-ல் என்ன பிரச்சினை? | Oneindia Tamil
  சொந்த செலவு

  சொந்த செலவு

  இந்த கட்சியில் இணைந்த வெண்ணிலா வனம் செய்வோம் என்ற அறக்கட்டளையை தொடங்கி பல்வேறு பிரச்சினைகளான 8 வழிச்சாலை, கல்குவாரிகள் அகற்றுவது, விமான நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுத்தார். இந்த வழக்கு வெற்றி பெற சீமானும் ஊக்கம் கொடுத்தாராம். அது போல் வழக்குக்கான செலவையும் சீமான் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வேடந்தாங்கல் பிரச்சினையை தமிழகத்தில் முதல்முதலாக முன்னெடுத்தது நாம் தமிழர் என்ற பெருமையையும், அக்கட்சிக்கு முதல் வெற்றியையும் தேடி தந்துள்ளார் வெண்ணிலா.

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Who is Vennila? A story of Woman who behind in protecting Vedanthangal Birds Sanctuary.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more