திமுக பக்கம் 2 பாஜக எம்எல்ஏக்கள்.. செந்தில்குமார் எம்.பி. சொன்னது யாரை தெரியுமா? றெக்கை கட்டிய யூகங்கள்
சென்னை: பாஜகவின் இரு சட்டசபை உறுப்பினர்கள் திமுகவுடன் தொடர்பில் உள்ளதாகவும் அவர்களை தலைவர் இசைவு தெரிவித்தால் தூக்கிவிடுவோம் என்றும் திமுக எம் பி செந்தில் குமார் கூறியிருக்கும் நிலையில் அந்த இரு எம்எல்ஏக்கள் யாரென்ற கேள்வி எழுகிறது.
திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார். இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என திருச்சி சிவா மகன் சூர்யா வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி நாங்கதான் என சொல்லிக் கொள்ளும் பாஜக, திமுகவின் முக்கிய புள்ளியின் மகனையே கொத்தாக தூக்கியதை பாஜகவினர் சமூகவலைதலங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

திமுக எம்பி செந்தில் குமார்
இந்த நிலையில் திமுக எம்பி செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக. உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள்.

தலைமை இசைவு
எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம் என தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜகவில் இருப்பதே 4 எம்எல்ஏக்கள். அவர்களில் யார் அந்த 2 பேர் என்ற கேள்விக்கு நமது நெட்டிசன்கள் ஒரே மாதிரியான பதில்களை அளித்துள்ளார்கள்.

4 எம்எல்ஏ
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், நாகர்கோவில் எம்எல்ஏ காந்தி , திருநெல்வேலி நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி சி சரஸ்வதி ஆகியோர் ஆவர். இவர்கள் 4 பேரில் வானதி ஸ்ரீனிவாசன் பக்கா பாஜக நிர்வாகி. பாஜக சித்தாந்தத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர். பதவிக்காகவோ பொறுப்பிற்காகவோ கட்சி தாவாதவர்.

வானதி இல்லை
எனவே வானதியாக இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அது போல் எம்ஆர் காந்தி, மிகவும் எளிமையான அரசியல்வாதி. அவரும் பாஜக கொள்கைகளுக்கு மாற்று கொள்கையுடைய கட்சியில் இணையமாட்டார். எனவே அவராகவும் இருக்க வாய்ப்பில்லை.

மீதமுள்ள இருவர்
மீதி இருப்பது இருவர்தான். அவர்கள் நயினார் நாகேந்திரன், சரஸ்வதி!. நெட்டிசன்கள் பெரும்பாலானோர் சொல்வது இவர்கள் இருவரைத்தான். ஆனால் இவர்கள் கட்சித் தாவ தேவையில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

மீதிமுள்ள இருவர்
மீதி இருப்பது இருவர்தான். அவர்கள் நயினார் நாகேந்திரன், சரஸ்வதி!. நெட்டிசன்கள் பெரும்பாலானோர் சொல்வது இவர்கள் இருவரைத்தான். ஆனால் இவர்கள் கட்சித் தாவ தேவையில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அதிமுக உறுப்பினர்கள்
நயினார் நாகேந்திரன் ஏற்கெனவே அதிமுகவில் இருந்தவர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதாவது ஜெயலலிதா மறைந்த பின்னர் பாஜகவில் இணைந்தார். அண்மையில் அதிமுக உறுப்பினர்களுக்கு சட்டசபையில் பேசுவதற்கு திராணி இல்லை என சொன்னதுடன் அவதூறான ஒரு வார்த்தையையும் நயினார் பயன்படுத்தியிருந்தார். இதனால் நகர்ப்புற தேர்தலின் தொகுதி பங்கீட்டின் போது கூட நயினார் நாகேந்திரனை அழைத்து செல்லவில்லை. அப்போதே அவர் அப்செட்டில் இருந்ததாக தெரிகிறது.

என்ன நடக்கும்
அதேநேரம், சட்டசபை பாஜக குழு தலைவர் இவர்தான். மத்தியில் பாஜக ஆட்சியிலிருக்கும்போது, இவர் கட்சி தாவ தேவையில்லை, அது அவருக்குதான் பின்னடைவாகும் என்று சில அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பொதுவாக ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆதரவு தருவது என்பது காலம் காலமாக நடக்கும் ஒன்றுதான். அந்த வகையில் இந்த இரு எம்எல்ஏக்களும் திமுகவில் இணைந்துதான் ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சொந்த கட்சியில் இருந்து கொண்டே பிரச்சினை அடிப்படையில் திமுகவுக்கு ஆதரவை தெரிவிக்கலாம்.
Recommended Video

கட்சி தாவல் தடை சட்டம்
கட்சி தாவல் சட்டம், 1985ன் படி இந்திய நாடாளுமன்ற மக்களவை அல்லது மாநிலங்களவை அல்லது மாநில சட்டமன்றத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சியில் உள்ள மொத்தமுள்ள உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சேர்ந்து வேறு கட்சிக்கு மாறினால் அல்லது புதிய கட்சி துவக்கினால் அவர்களின் பதவி பறிபோகாது என்பதால்தான் செந்தில்குமார் போட்ட இந்த ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுபோன்ற புகாருக்கு பாஜக எம்எல்ஏக்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அதுவரை இதுபோன்ற யூகங்கள் றெக்கை கட்டி பறந்து கொண்டுதான் இருக்கும். ஒரு வேளை பாஜகவினருக்கு கிலியை ஏற்படுத்த திமுக எம்பி செந்தில் குமார் இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications