சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தூக்குங்க" அவரை.. பாஜக சீக்ரெட் மூவ்.. ஓவர்டேக் செய்யும் டிடிவி.. டக்கென திரும்பும் எடப்பாடி, ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் மேற்கொள்ளும் வியூகம் என்ன

Google Oneindia Tamil News

சென்னை: டிடிவி தினகரனின் விஸ்வரூபம் ஆரம்பமாக போகிறது என்கிறார்கள் அமமுகவினர்.. இதற்கு காரணமே பாஜகதான் என்றும் சொல்கிறார்கள்... என்ன நடக்கிறது அதிமுகவில்?

எடப்பாடி பழனிசாமி கோர்ட் உத்தரவுடன் அதிமுக பொதுக்குழுவை நடத்தி முடித்துவிட்டார்.. தற்சமயம், அவர்தான் அதிகவில் பலம் பொருந்தியவராக இருக்கிறார் என்பதை மறுக்கமுடியாது.

அதேபோல, ஓபிஎஸ்ஸும் தன் சார்பில் போட்டி பொதுக்குழுவை நடத்த தயாராகி வருகிறார்.. தன்னுடய பலத்தையும், செல்வாக்கையும் நிரூபிக்கும் வகையில், இந்த பொதுக்குழு அமைய வேண்டும் என்று, பல்வேறு வியூகங்களிலும் இறங்கி வருகிறார்.

துரோகம் பண்ணாங்க..அனுபவிக்கிறாங்க! போகிற போக்கில் போட்டு தாக்கிய டிடிவி தினகரன்! அவரையா சொல்கிறார்? துரோகம் பண்ணாங்க..அனுபவிக்கிறாங்க! போகிற போக்கில் போட்டு தாக்கிய டிடிவி தினகரன்! அவரையா சொல்கிறார்?

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இதற்கிடையில்தான், டிடிவி தினகரன், அமமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த போகிறார்.. வரும் 15ம் தேதி இந்த கூட்டம் நடக்க உள்ளது.. இந்த பொதுக்குழு கூட்டத்தைதான் மிக மிக அதிகம் நம்பி உள்ளாராம் தினகரன்.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகிறது.. நடக்கப்போகும் கூட்டத்தில் அமமுகவின் பலத்தை காட்ட போகிறாராம்.. இதற்காகவே, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது... பிரம்மாண்டமாக பொதுக்குழுவை கூட்டி நடத்தி காட்டினால் தொண்டர்கள் உற்சாகமடைவார்கள், மொத்த பேரின் கவனமும் அமமுக பக்கம் திரும்பும் என்பது டிடிவி தினகரனின் முதல் கணக்காகும்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அடுத்ததாக, எடப்பாடி பழனிசாமியை அரசியலில் தோற்கடித்தே தீர வேண்டும் என்றும் தினகரன் உறுதி செய்துள்ளாராம்.. எடப்பாடியிடம் இருக்கும் நிர்வாகிகள், வெறும் பதவிக்காக ஒட்டிக் கொண்டிருப்பவர்கள், ஆனால், அமமுகவில் உள்ளவர்கள், பதவியை எதிர்பார்த்து இருப்பவர்கள் இல்லை, கட்சிக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.. ஓபிஎஸ் போல் அல்லாமல், எடப்பாடி பழனிசாமியை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருவது அமமுக மட்டுமே.. அதனால்தான் இன்று, எடப்பாடி பழனிசாமி சமூகத்தில்கூட அமமுகவுக்கான செல்வாக்கு பெருகி காணப்படுகிறது போன்றவைகளையும் பொதுக்குழு மூலம் எடுத்து சொல்வதே தினகரனின் இன்னொரு கணக்காக உள்ளது.

காதுகள்

காதுகள்

இது எல்லாவற்றிற்கும் மேலாக, தினகரன் முன்னெடுக்கும் இத்தனை முயற்சிகளும் டெல்லி காதுகளுக்கு சென்று விழ வேண்டுமாம்.. காரணம், அதுக்கும் ஒரு கணக்கு இருக்கிறதாம்.. விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக அதற்கு மும்முரமாகி உள்ளது.. எடப்பாடி பழனிசாமியை கழட்டிவிட்டுவிட்டு, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் போன்றோரை இணைத்து தேர்தலை தனித்து சந்திக்க பாஜக யூகித்து வருவதாக தெரிகிறது.. ஆனால், டிடிவி தினகரன் இந்த விஷயத்தில் முந்திக் கொண்டு, தன்னுடைய தலைமையில் 3வது அணியை அமைத்து தேர்தலை சந்திக்க போவதே அந்த மெகா கணக்காம்.

 தேமுதிக பாஜக பாமக

தேமுதிக பாஜக பாமக

அதாவது, அமமுக + பாமக + தேமுதிக + பாஜக + ஓபிஎஸ் + சசிகலா என அனைவரையும் ஒன்றாக இணைத்து, 3வது அணி அமைத்து தேர்தலை சந்திக்கும்போது, தன்னுடைய தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மலர வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் காலூன்ற இது பாஜகவுக்கு கூடுதல் பலத்தை தரும் என்றும் தினகரன் நம்புகிறாராம்.. கடந்த எம்பி தேர்தலின்போதே, பாஜகவுடன் கூட்டணி வைக்க தினகரன் முயற்சித்தார்.. ஆனால், நடக்கவில்லை.

 விட்டுடாதீங்க அவரை

விட்டுடாதீங்க அவரை

பாஜகவை பொறுத்தவரை டிடிவி மீது ஆரம்பத்தில் இருந்தே நிறைய நம்பிக்கை வைத்துள்ளது.. பிரத்யேகமான சாப்ட் கார்னர் உள்ளது.. மிகசிறந்த அரசியல் தலைவர் என்ற வரிசையில் அவரை இணைத்து பார்க்கிறது.. "அவரை இந்த பக்கம் கொண்டு வந்துடுங்க" என்று ஒருமுறை மேலிட தலைவர்களே விருப்பப்பட்டு சொன்னதாகவும் செய்திகள் வெளியாகின.. எனவே, வரும் 2024ம் ஆண்டு எம்பி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு கணிசமான லோக்சபா தொகுதிகளை ஒதுக்கலாம் என மேலிடம் விரும்புவதாக தெரிகிறது..

Recommended Video

    ADMK | கூட்டணி குறித்து எங்க பொதுச்செயலாளர் முடிவெடுப்பாரு - Sellur Raju *Politics | Oneindia Tamil
     மதிமுக + விசிக

    மதிமுக + விசிக

    ஆனால், பாஜகவை முந்திக் கொண்டு டிடிவி கணக்கு போடுவதால், யார் தலைமையில் 3வது அணி அமைய போகிறது என்று தெரியவில்லை.. ஆனால், எப்படி பார்த்தாலும் 3வது அணி இந்த முறை உருவாவது நிச்சயம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. விசிக + மதிமுக + காங்கிரசுடன் இணைத்து திமுக இந்த முறையும் தேர்தலை சந்திக்குமா? அல்லது எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் கை கோர்க்குமா தெரியவில்லை.. ஆனால், இந்த 3வது அணியை திமுக எப்படி சமாளிக்க போகிறது என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.. பார்ப்போம்..!

    English summary
    Who will lead the 3rd team in tamilnadu and Will ttv dinakaran lead the 3rd front எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் மேற்கொள்ளும் வியூகம் என்ன
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X