சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதையே இப்பதான் கண்டுபுடிக்கிறீங்களா? 50000 மாணவர்கள் தேர்வுக்கு ஆப்சென்ட்! அரசு பள்ளி ஆசிரியை கேள்வி

"இந்த சாதாரண விளக்கத்தைக் கண்டுபிடிக்க இவ்வளோ நாளாகி இருக்கு. இதுக்கு ஒரு விசாரணைங்களா சார்? எந்த ITI களில் (TC) மாற்றுச் சான்றிதழ் வாங்காம சேர்க்கின்றனரோ?" என்று ஆசிரியை கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சுமார் 50000 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில பொதுத்தேர்வுகளை எழுத வராதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் அரசு பள்ளி ஆசிரியை பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத வராத 50 ஆயிரம் மாணவர்கள் ஐடிஐ உள்ளிட்ட நிறுவனங்களில் டிசி பெறாமல் சேர்ந்து இருக்கலாம் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியரும், எழுத்தாளருமான உமா மகேஸ்வரி பல்வேறு கேள்விகளை எழுப்பி பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பெண்களுக்கு ரூ. 1,000 திட்டம்..முதல்வரை இழிவாக விமர்சித்த சவுக்கு சங்கர் ஆதரவாளர் பிரதீப் கைது பெண்களுக்கு ரூ. 1,000 திட்டம்..முதல்வரை இழிவாக விமர்சித்த சவுக்கு சங்கர் ஆதரவாளர் பிரதீப் கைது

ஆசிரியை உமா மகேஸ்வரி

ஆசிரியை உமா மகேஸ்வரி

"EMIS இல் வெறும் பேர் மட்டும் இருந்து தொடர்ந்து ஆப்சென்ட் ஆனதுக்கு

இந்தக் கல்வித் துறை அதிகாரிகள் சும்மாவே விடமாட்டாங்களே சார். ஆன்லைன் அட்டன்டென்ஸ் வசதி இருந்தும் ஒரு கல்வி ஆண்டு முழுவதும் அனைவரும் ஆப்சென்ட் காட்டிட்டு ஐடிஐ க்கு போனாங்களா? ஒன்னுமே புரியலங்க சார்.

இதையே இப்போதுதான் கண்டுபிடிக்கிறீர்களா?

இதையே இப்போதுதான் கண்டுபிடிக்கிறீர்களா?

இந்த சாதாரண விளக்கத்தைக் கண்டுபிடிக்க இவ்வளோ நாளாகி இருக்கு. இதுக்கு ஒரு விசாரணைங்களா சார்? எந்த ITI களில் (TC) மாற்றுச் சான்றிதழ் வாங்காம சேர்க்கின்றனரோ? உங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் நம்ம அரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு சேரவே TC கேட்கிறாங்க. ஏன் எட்டாம் கிளாஸ் சேர்க்க TC இல்லைனா உள்ளே விடமாட்டோம்னு சொல்ற தலைமைகள் எத்தனையோ பேர் இருக்காங்களே?

முக்கியமான துறை

முக்கியமான துறை

இந்த தமிழ்நாட்டு மக்கள் உங்க மேல எவ்ளோ நம்பிக்கை வச்சு முக்கியமான துறையான கல்வித் துறைக்கு அமைச்சர் என்ற இடத்தைக் கொடுத்திருக்காங்க. அந்த வகையில், தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் ஆணிவேராக இருக்கும் பிரச்சனைகள் என்னன்னு எப்பவாச்சும் மனசார ஆய்வு செய்து இருக்கீங்களா சார்?

என்ன காரணம்?

என்ன காரணம்?

உங்களைச் சுற்றி இருக்கும் கல்வித் துறை அதிகாரிகளாவது துறையில் உள்ள பிரச்சனைகளைக் குறித்த உண்மைகளைத் தெளிவாக சொல்றாங்களாங்க?ரொம்ப வருத்தமாக இருக்குங்க சார். சரியான காரணந்தான் என்னங்க?மெய்யாலுமே மாணவர்களனைவரும் என்ன ஆனாங்க? சரியான தரவுகளுடன்

இதை அணுகுங்கள். அவசரமே இல்லை.

தினம் ஒரு அறிக்கை

தினம் ஒரு அறிக்கை

அதை விட்டுட்டு புதுசா பண்றோம்னு எதையாவது நீங்களே முடிவு பண்ணி தினம் ஒரு அறிக்கை விடுவதை நிறுத்திடுங்க. அப்புறம் நிஜமா கல்விமுறையை சரி செய்ய ஆலோசனை சொல்றவங்கள கூட வச்சுக்கோங்க. அப்படியான செயல்பாடுகள் தான் எதிர்காலத்தில் உண்மையான வரலாற்றில் உங்கள் பணிகளைப் பற்றிப் பேசும்.

சரியான கல்வி

சரியான கல்வி

நீங்க எத சொன்னாலும் ஆமாம் சாமி போடும் புகழ்பாடும் கூட்டங்களை தவிர்த்து நேரடியாக களத்தில் நிற்பவர்களிடம் உண்மையைக் கேளுங்கள். வரும் கல்வி ஆண்டிலாவது அரசுப் பள்ளிகளில் சரியான முறையில் கல்வி வழங்கும் சூழலை உருவாக்க திட்டமிடுங்கள்." என்று அவர் வேதனையுடன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

English summary
While the 12th class general exams have started and are going on, around 50000 students are not coming to write the Tamil and English general exams causing a lot of excitement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X