ஸ்கெட்ச் 315! போகஸை திருப்பிய ஸ்டாலின்! அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு ஏன்? இதுதான் காரணம்
சென்னை: நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. இந்த ரெய்டுக்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரின் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது. முக்கியமாக மாஜி அமைச்சர்கள் பலர் வரிசையாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வளையத்தில் சிக்கி வருகிறார்கள்.
முதலில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து வரிசையாக எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, சி விஜயபாஸ்கர், என்று பலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மாஜி ரெய்டு
இதில் முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டது. கடந்த 10 வருடத்தில் வருமானத்திற்கு அதிகமாக 58,44,38,252 ரூபாய் சொத்து சேர்த்ததாக காமராஜ் மீது புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில் மாஜிக்கள் மீதான வழக்குகளில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவும் உறுதி அளித்துள்ளது.

ஆர்.எஸ் பாரதி
சமீபத்தில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், மாஜி அமைச்சர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தேவையின்றி கைது செய்ய மாட்டோம். வழக்கு பதிந்து உள்ளோம். வழக்குகளை விசாரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில், நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. இந்த ரெய்டுக்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

எத்தனை இடங்கள்
மொத்தம் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றன. இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் மட்டும் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், முதல்முறை முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடக்கிறது. முதல்முறையாக முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் பக்கம் முதல்வர் ஸ்டாலின் அரசு போகசை திருப்பி உள்ளது. இந்த ரெய்டுக்கு காரணம் என்ன என்று லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக அறிக்கை வெளியிட்டுப்பட்டுள்ளது.

அறிக்கை
லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையில், நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.P.P.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார். மேற்படி வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315% அதிகமாகும்.
Recommended Video

வருமானம் அதிகம்
எனவே இது சம்பந்தமாக அவர்கள் மீது 11.08.2022 ஆம் தேதி நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.1/AC/2022 பிரிவு 13(2) r/w 13(1) (e) of PC Act 1988, 109 r/w 13(2) r/w 13(1) (e) of PC Act 1988 and 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018 மற்றும் பிரிவு 12 r/w 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்துவருகிறது. மேலும் இவ்வழக்கு மேற்படி வழக்கின் விசாரணை தொடர்பாக திரு.K.P.P.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவரது அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் (நாமக்கல்-24, மதுரை-1, திருப்பூர்-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று 12.08.2022-ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது, என்று கூறப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications