அச்சோ.. இது நடந்தா ஆணிவேரே ஆடிடும்! ஸ்டன் ஆகி நின்ற அதிமுக டாப் லீடர்ஸ்.. ஆளுநர் மேசையில் என்ன அது?
சென்னை: அதிமுக டாப் தலைவர்கள் சிலர் கடுமையான அச்சத்தில் இருக்கிறார்களாம். எடப்பாடி பழனிசாமி முடிவால் முக்கியமான கவலை ஒன்றில் அதிமுகவினர் இருக்கிறார்களாம்.
அதிமுக - பாஜக கூட்டணி மொத்தமாக முறிந்துள்ளது. இந்த கூட்டணி முறிவு காரணமாக பாஜக ஒரு பக்கம் அப்செட்டில் உள்ளது. அதிமுக கூட்டணி இல்லாமல் நாம் தேர்தலில் வெற்றிபெற முடியாது. நாம் தேர்தலில் ஜெயிக்க வாக்கு வங்கி ரீதியாக அதிமுக சப்போர்ட் தேவை.
கொங்கு மண்டலத்தில் வெல்ல அதிமுக தேவை. அதோடு அதிமுக இருந்தால் பாஜக எம்பி தேர்தலில் வெல்ல முடியும். எம்பி தேர்தலில் 2-3 எம்பிக்களை வெல்ல வேண்டும் என்றாலும் அதற்கு அதிமுக ஆதரவு வேண்டும். அதிமுக இல்லாமல் இது சாத்தியமே இல்லை என்று பாஜகவினர் கருதுகிறார்களாம்.

அதிமுக அதிர்ச்சி: இன்னொரு பக்கம் அதிமுகவினர் பலரும் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். அதன்படி அதிமுக டாப் மாஜி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாஜி அமைச்சர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உள்ளன. சொத்து குவிப்பு வழக்கு, பண மோசடி வழக்கு, ஒப்பந்த மோசடி வழக்கு என்று பல்வேறு வழக்குகள் இவர்களுக்கு எதிராக உள்ளன.
( பாஜக + பாமக.. தமிழ்நாடு அரசியலே மாறப்போகுது.. அதிமுகவிற்கு பேரிடியாக மாறிய செய்தி.. போச்சே)
இதில் மாஜி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கில் ஆக்சன் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மாஜி அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் ஆக்சன் எடுக்கப்படவில்லை. காரணம் ஆளுநர் ஆர். என் ரவி இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்த வழக்குகளை முறையாக பதிய, நடவடிக்கை எடுக்க ஆளுநர் ரவி அனுமதி வேண்டும். இந்த கோப்புகள் எல்லாம் ஒன்றரை வருடமாக ஆளுநர் ரவி மேசையில் உள்ளது. அவர் அனுமதி கொடுக்கவில்லை.
அதிமுகவினர் பேச்சு: இது தொடர்பாக நம்மிடம் பேசிய அதிமுகவினர், இதுவரை நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்தோம். அதனால் இதுவரை ஆளுனர் ரவி எங்கள் மீது ஆக்சன் எடுக்க அனுமதிக்கவில்லை. நாங்களும் பிரச்சனை இன்றி இருந்தோம். இப்போது பாஜக பாதுகாப்பு எங்களுக்கு இல்லை. திமுகவை எதிர்க்க பாஜகவின் பாதுகாப்பு எங்களுக்கு அவசியமாக இருந்தது. அது இப்போது இல்லாமல் போய்விட்டது.

இது போக எங்களை மீண்டும் கூட்டணியில் சேர சொல்ல பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால் எங்கள் மேலிடம் பாஜகவுடன் கூட்டணி வைக்க ரெடியாக இல்லை. அப்படி இருக்க கூட்டணியை படிய வைக்க இந்த வழக்கு அஸ்திரத்தை பாஜக பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. மீண்டும் கூட்டணியில் இணையுங்கள். இல்லையென்றால் ஆக்சன் எடுப்போம். உங்கள் மீது ஆக்சன் எடுக்க அனுமதி கொடுக்க சொல்லுவோம்.
( கண் அசைத்த ஸ்டாலின்.. கம்பீரமாக நின்ற செந்தில் பாலாஜி.. மொத்தமாக எல்லாம் மாறுது.. அப்படி போடு!)
ஆளுனர் மேஜையில்தான் பைல்கள் இருப்பதாக அவர்கள் எங்களிடம் கூறலாம். அதனால் எங்களுக்குத்தான் இப்போது பிரஷர். இதை எப்படி அதிமுக சமாளிக்கும் என்று தெரியவில்லை என்று அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான சிலரோ.. கூட்டணி முறிந்தது முறிந்ததுதான். அதிமுக வழக்குகளை எதிர்கொள்ள ரெடி. வழக்கு நடந்தால் சரி.. ஆளுநர் அனுமதி கொடுத்தாலும் சரி.; அதை எல்லாம் எதிர்கொள்ள நாங்கள் தயார். கூட்டணியை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் திட்டமே இல்லை. அவர்கள் ஆக்சன் எடுத்தால் எடுக்கட்டும் என்ற நம்பிக்கையில் எடப்பாடி இருக்கிறாராம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications