வடஇந்தியாவிற்கு மட்டும் முன்னுரிமையா? பாகுபாடு காட்டி.. தென்னிந்தியர்களிடம் வறுபட்ட நத்திங் போன்!
சென்னை: டுவிட்டரில் நேற்று முதல் DearNothing எனும் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் நத்திங் போன் ஒன் தென்இந்தியர்களுக்கு எதிரானதா என்ற கேள்வி எழுந்த நிலையில் அதுபற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
நேற்று முதல் டுவிட்டரில் #DearNothing எனும் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. குறிப்பாக இதில் தென்இந்தியாவை சேர்ந்தவர்கள் அதிகமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது எதற்காக நடந்தது?, இதன் பின்னணி என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

நத்திங் போன் அறிமுகம்
இங்கிலாந்தின் லண்டனை தலைமையிடமாக கொண்I ஸ்டார்ட் அப் நிறுவனம் நத்திங் செயல்பட்டு வருகிறது. முன்னாள் முன்னாள் ஒன்பிளஸ் நிறுவனர்களில் ஒருவரான கார்ல் பெய் இந்த நிறுவனத்தை துவக்கி உள்ளார். இந்த நிறுவனம் சமீபத்தில் தங்களின் முதல் ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிறுவனம் சார்பில் நத்திங் போன் (1) (Nothing Phone one) எனும் பெயரில் புதிதாக போன் வெளியிடப்பட்டது. இதற்கான அறிமுக விழா நேற்று இரவு நடந்தது. இந்த விழாவை தொடர்ந்து நத்தின் போன் ஒன் எனும் போன் உலகின் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகி உள்ளது. தற்போதைய தொழில்நுட்பங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது.

யூடியூபர்கள் வீடியோ வெளியீடு
முன்னதாக இந்த போன் அறிமுக விழாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் யூடியூபர்கள் அதன் சிறப்பம்சம் பற்றிய வீடியோக்களை வெளியிட்டுள்ளன. அதாவது புதிய போன் பற்றிய சிறப்பம்சங்களை வீடியோவாக வெளியிட முன்கூட்டியே அந்த நிறுவனம் கூறி யூடியூபர்களுக்கு போன் அனுப்பி இருந்தது. இதையடுத்து அதுபற்றி அந்த யூடியூபர்கள் வீடியோக்கள் வெளியிட்டனர்.

யூடியூபர்களுக்கு வரவில்லையாம்
ஆனால் நத்திங் போன் ஒன் பற்றிய ரீவியூவுக்கு தென் இந்தியாவின் பிரபல யூடியூபர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதாவது அந்த நிறுவனம் சார்பில் போன்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த யூடியூபர்கள் நத்திங் போன் (1) நிறுவனத்தை விமர்சிக்க துவங்கினர்.

தென்இந்தியாவுக்கு எதிரானதா?
இவர்கள் தங்களின் கருத்துகளை ‛DearNothing' எனும் ஹேஷ்டேக்கில் பதிவிட்டனர். குறிப்பாக தெலுங்கு மொழியில் தொழில்நுட்பம் சார்ந்து வீடியோ வெளியிட்டு வரும் Prasatechintelugu யூடியூபர் நிறுவனத்தை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவானது நத்திங் போனின் பாக்ஸை பிரிப்பதும் போலவும், அதில் உள்ள கடிததில் ‛Hi Prasad The Device is not for south indian people' என எழுதி இருப்பதும் போன்றும் இருந்தது. அதாவது தென்இந்தியாவில் யூடியூபர்களுக்கு ரிவியூ செய்ய போன் அனுப்பாததை குறிப்பிடும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது.

டுவிட்டரில் டிரெண்ட்
இதையடுத்து அந்த கடிதம் மட்டும் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இதையடுத்து தான் அனைத்து தரப்பு மக்களுக்கு ‛DearNothing' என்ற ஹேஷ்டேக்கில் பதிவுகள் செய்ய துவங்கினர். இதில் நிறுவனத்துக்கு எதிராக, ஆதரவாக என கலவையாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் சிலர் தங்களின் வாழ்க்கை மிகவும் போரடிக்கிறது. இதுபற்றி சொல்ல ஒன்றும் இல்லை எனக்கூறி வேடிக்கையாகவும் #DearNothing எனும் ஹேஷ்டேக்கில் பதிவுகள் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொது மேலாளர் விளக்கம்
இதைத்தொடர்ந்து நத்திங் நிறுவனத்தின் இந்தியாவுக்கான பொது மேலாளர் மனு சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நத்திங் போன் (1) மண்டலம் வாரியாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் படிப்படியாக பிறருக்கும் அனுப்பப்பட உள்ளது. தற்போது வெளியான கடிதம் போலியானது. இது நிறுவனத்திடமிருந்து இருந்து அனுப்பப்படவில்லை. ஒரு புதிய பிராண்டை துவங்கும் எங்கள் பயணத்தை தவறாக சித்தரிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது'' என கூறியள்ளார்.












Click it and Unblock the Notifications