சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் ஸ்டாலின் கான்வாயில் "புட்-போர்ட்" அடித்தது ஏன்? நடந்தது என்ன? மேயர் பிரியா தந்த விளக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கான்வாயில் தொங்கியபடி சென்றது ஏன் என்று மேயர் பிரியா ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையை தாக்கிய மாண்டஸ் புயலை தமிழ்நாடு அரசு சிறப்பாக எதிர்கொண்டு உள்ளது. தமிழ்நாடு அரசு, சென்னை மாநகராட்சி இணைந்து இந்த புயலை சிறப்பாக எதிர்கொண்டு உள்ளனர்.

இந்த புயல் காரணமாக வெள்ளிக்கிழமை மாலைக்கு பின் பேய் மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்க போகிறது என்ற எதிர்பார்ப்புதான் இருந்தது. ஆனாலும் சென்னையிலும் பெரும்பாலும் எந்த பகுதியிலும் வெள்ளம் ஏற்படவில்லை.

 முதல்வர் காரில் மேயர் பிரியா புட்போர்ட்! வந்து விழுந்த கேள்வி! சிரித்து கொண்டே பதிலளித்த தமிழிசை முதல்வர் காரில் மேயர் பிரியா புட்போர்ட்! வந்து விழுந்த கேள்வி! சிரித்து கொண்டே பதிலளித்த தமிழிசை

வெள்ளம் இல்லை

வெள்ளம் இல்லை

ஒரு சில பகுதிகளில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தாலும், வெள்ளம் ஏற்படவில்லை. தண்ணீர் தேங்கிய இடங்களிலும் உடனே தண்ணீர் வேகமாக வடிந்தது. கத்திப்பாரா பாலம், கேகே நகர், ஓஎம்ஆர் சாலையில் சில பகுதிகள் தவிர பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்படவில்லை. இந்த பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் கால்வாய் திட்டம் முழுமையாக முடியவில்லை என்பதால் அங்கு மட்டும் வெள்ளம் ஏற்பட்டது. மற்ற சாலைகளில் காலையில் பொழுது விடுவதற்குள் வெள்ளம் வடிந்தது. இதனால் பெரிய சேதத்தில் இருந்து சென்னை தப்பித்தது.

மேயர் பிரியா

மேயர் பிரியா

சென்னை மேயர் பிரியா முதல்வர் ஸ்டாலினின் காரில் தொங்கிக்கொண்டு சென்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாஜகவினர் விமர்சனம் வைத்து வருகின்றனர். இணையத்தில் மேயர் பிரியாவை விமர்சனம் செய்து போஸ்ட் செய்து வருகின்றனர். ஒரு மேயர் இப்படி முதல்வரின் காரில் தொங்கிக்கொண்டு செல்லலாமா? இது சரியா என்று கேட்டுள்ளனர். அந்த காரில் மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடியும் தொங்கிக்கொண்டு இருந்தார். இது தவறு என்று கேட்டு பாஜகவினர் உட்பட பலர் விமர்சனம் வைத்து வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட மரங்கள் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை சாலையில் விழுந்தது. இந்த மரங்கள் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் மூலம் அகற்றப்பட்டது. அல்லது ஓரமாக வைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து எங்கும் தடைப்படவில்லை.

 ஏன் விளக்கம்

ஏன் விளக்கம்

இந்த நிலையில் முதல்வரின் காரில் தொங்கிக்கொண்டு சென்றது ஏன் என்று பிபிசி தமிழிடம் சென்னை மேயர் பிரியா ராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில், காசிமேட்டில் இரண்டு இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஒரு இடத்தில் எங்களுடன் ஆய்வு செய்தார். அடுத்த இடத்தில் ஆய்வு செய்யும் முன் அவருக்கு முன்பாக அந்த இடத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும். அவருக்கு முன்பாக சென்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இரண்டு இடங்களுக்கும் இடையில் தொலைவு அதிகமாக இருந்தது.

நடந்து சென்றேன்

நடந்து சென்றேன்

இதனால் நான் நடந்து சென்று கொண்டு இருந்தேன். திடீரென அங்கு கான்வாய் வந்தது. அந்த கான்வாய் வந்து கொண்டு இருந்ததால் அதிலேயே ஏறிவிடலாம் என்று ஏறிட்டேன். ஆனால் இதை வைத்து இவ்வளவு சர்ச்சை செய்வார்கள் என்று நினைக்கவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டோம். இதில் முதல்வருக்கு முன்பாக செல்ல வேண்டும் என்றுதான் சென்றேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. கான்வாயில் இப்படி வருமாறு என்னிடம் சொல்லவில்லை. இதை சர்ச்சையாக்கி உள்ளனர், என்று மேயர் பிரியா ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

English summary
Why did i travel in footboard in CM Stalin convoy during an inspection? - Explains Chennai mayor Priya
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X