"முடிஞ்சா தொட்டு பார்".. சிவனை இழிவுபடுத்தினாரே விஜய்.. கனல் கண்ணனை கைது செய்யலாமா.. எச்.ராஜா ஆவேசம்
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு எச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்
சென்னை: சிவபெருமானை இழிவுபடுத்திய யூ டியூபர் மைனர் விஜய்யை கைது செய்ய துணிச்சலற்ற காவல்துறை, கனல் கண்ணனை கைது செய்யலாமா? கடவுளை இழிவுப்படுத்தலாம் என்றால் மனிதனை பற்றி பேசியது தவறா? என்று பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்து முன்னணியின் சார்பில் கடந்த ஒரு மாதமாக இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணம் தொடங்கி நடைபெற்று வந்தது..
அதன் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் 2 நாட்களுக்கு முன்பு நடந்தபோது, இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

கனல் கண்ணன்
"ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என்று பேசியிருந்தார். கனல் கண்ணன் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று புகார்கள் போலீசில் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.. "கனல் கண்ணனை தொட முடியாது" என்று அவருக்கு ஆதரவான கமெண்ட்கள் எழுந்தாலும், "முடிஞ்சா தொட்டுப்பார் பெரியார் சிலையை" என்று ஹேஷ்டேக்குகளும் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

புரளிகள்
இதனிடையே, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.. இந்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது, கலகம் செய்யத் தூண்டுதல் , அவதூறு செய்தி மூலம் பொது மக்களிடையே விரோதத்தை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கனல் கண்ணன் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகி உள்ளன.. மதுரவாயலில் உள்ள அவரது வீடு உள்பட 3 இடங்களில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்..

கனல் கண்ணன்
கனல் கண்ணன் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற சூழலில், தமிழக பாஜக தலைவர்கள், கனல் கண்ணன் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்றைய தினம் மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது, "கனல் கண்ணன் பேசுவது தவறு என்றால், திமுகவில் மேடை போட்டு, இழிவுபடுத்திய பேசிய எல்லாமும் மிகப்பெரிய பாவம் என்றே சொல்ல வேண்டும்.. கனல் கண்ணன் பேசியது அவரது கருத்து சுதந்திரம் என்றார்.. அதேபோல வானதி சீனிவாசனும், கடவுள் நிந்தனை செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக தங்கள் நிலைப்பாடு இருக்கும் என்று சொல்லி மறைமுக சப்போர்ட்டை தந்தார்.

ராஜா
இப்போது, மூத்த தலைவர் எச்.ராஜா, கனல் கண்ணனுக்கு ஆதரவு தந்ததுடன், ட்வீட் போட்டு கடுமையான கண்டனத்தை திமுக அரசுக்கு விடுத்துள்ளார்.. சிவபெருமானை இழிவுபடுத்திய யூ டியூபர் மைனர் விஜய்யை கைது செய்ய துணிச்சலற்ற காவல்துறை, கனல் கண்ணனை கைது செய்யலாமா? கடவுளை இழிவு படுத்தலாம் என்றால் மனிதனை பற்றி பேசியது தவறா? இதற்கு தமிழக இந்து விரோத காவல் (ஏவல்) துறையின் பதிலென்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

சிவபெருமான்
யூடியூபர் விஜய் விவகாரம் அன்று வெடித்தபோதும், 'தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி. சிவனை இகழ்ந்தவனை தமிழக அரசே உடனே கைது செய்" என்று எச்.ராஜா கொந்தளித்திருந்தார்.. இன்று மீண்டும் அதே சம்பவத்தை நினைவூட்டி, தமிழக அரசை கேள்வி கேட்டுள்ளார்.. இதையடுத்து திமுகவினர் திரண்டு வந்து, ஆண்டாள் விவகாரத்தை நினைவூட்டி, எச்.ராஜாவுக்கு கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார்கள்..
Recommended Video

வைரமுத்து
"நீங்க அப்படிதானே இங்கே எழுதி வச்சி இருக்கீங்க.. இங்கே யாரும் புதுசா சொல்லவில்லை, பெரியார் எழுதியதை எல்லாம் சொல்ல உங்களுக்கு துணிவு இருக்கா? வைரமுத்துவை, அவரது தாய் மனைவியை இழிவாக பேசினீர்களே, அது தவறில்லையா? கோர்ட்டை இழிவாக பேசினீர்களே, அது தவறில்லையா? இதற்கெல்லாம் ஏன் அதிமுக ஆட்சியில் கைது நடவடிக்கை எடுக்கவில்லை? உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? எப்ப பார்த்தாலும் மதத்தை வைத்தே மக்களுக்குள் பிளவு உண்டாக்கி சண்டையை உண்டாக்கி அரசியல் செய்கிறீர்களே? என்றெல்லாம் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications