தேதி குறித்த எடப்பாடி.. வேலையைத் தொடங்கிய மா.செக்கள்.. தென் தமிழக பயணத்தின் நோக்கம் என்ன?
சென்னை : தென் மாவட்டங்களில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்குவார் என்று கூறப்படும் நிலையில், அவருக்குப் போட்டியாக எடப்பாடி பழனிசாமியும் தென் தமிழக சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கிறார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது பலத்தை நிரூபிக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தனக்கு பலம் அதிகமுள்ள தென் மாவட்டங்களில் இருந்து தனது பயணத்தை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ்ஸின் இந்தச் சுற்றுப்பயணத்துக்கு போட்டியாகவே எடப்பாடி பழனிசாமி தென் மாவட்ட சுற்றுப்பயணத் திட்டத்தை வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈபிஎஸ் ஆதரவு மா.செக்கள் இந்த சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர்.

ஈபிஎஸ் மிஸ்ஸிங்
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியாக இரட்டை இலைச் சின்னத்தில் வென்ற மாயத்தேவர் சமீபத்தில் காலமான நிலையில், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டிக்கு சசிகலா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ஓ.பன்னீர்செல்வமும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால் மாயத்தேவர் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. தென் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகியின் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தாதது அதிமுகவினர் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

வடக்கு, மேற்கில் பலம்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டு செல்லும்போதும் சேலத்தில் இருந்து சென்னை வரும்போதும் பல்வேறு இடங்களில் நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சமீபத்தில் கூட சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் ஆதரவாளர்களை சந்தித்துப் பேசினார்.

தெற்கில் திட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தின் பழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் சமீபத்தில் பங்கேற்றுப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதற்குத் தெற்கே எடப்பாடி பழனிசாமி இன்னும் செல்லவில்லை. மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் தனக்கான ஆதரவு அதிகம் இருப்பதாகக் கருதும் எடப்பாடி பழனிசாமி, அப்பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வந்துள்ளார். தெற்கில் இன்னும் பலம் பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நினைப்பதாகக் கூறப்படுகிறது.

ஆர்பி உதயகுமார்
மதுரை மண்டலத்தில் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கைச் சரிக்கும் திட்டத்தோடு தான் அவரது சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமாரை களமிறக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஈபிஎஸ்ஸின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் உதயகுமாரும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். ஓபிஎஸ் சார்ந்துள்ள சமூக மக்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளிலும் ஆர்பி உதயகுமார் தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தீர்ப்புக்குப் பிறகு
இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் விசாரணை நேற்றோடு முடிவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு தனக்கு சாதகமாகவே வரும் என நம்பிக்கையுடன் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்தத் தீர்ப்புக்குப் பிறகு தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

தென் மாவட்ட பயணத்தின் நோக்கம்
தென் மாவட்டங்களில் அதிகமாக உள்ள முக்குலத்தோர் சமூகத்தின் ஆதரவு ஓபிஎஸ் பக்கம் இருக்கும் நிலையில், அதைச் சரிப்பதற்கான திரைமறைவு வேலைகளை ஏற்கனவே ஈபிஎஸ் தரப்பினர் தொடங்கிவிட்டனர். ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டங்களில் இருந்து தனது பயணத்தை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் போட்டியாகவே எடப்பாடி பழனிசாமி தென் மாவட்ட சுற்றுப்பயண திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. தென் மாவட்டத்திலும், தனது பலத்தை நிரூபித்து விட்டால் இன்னும் வலுவாகக் களமிறங்கலாம் என்ற எதிர்பார்ப்பில் ஈபிஎஸ் இருக்கிறாராம்.

தெற்கில் ஓபிஎஸ் கை தாழ்ந்துவிடும்
தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு பெரும் வரவேற்பு இருப்பதாக தொண்டர்களுக்கு தெரிந்தாலே போதும், ஓபிஎஸ்ஸின் கை தெற்கில் தாழ்ந்துவிடும் என ஈபிஎஸ் கணக்குப் போட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். தெற்கில் தான் ஓபிஎஸ் பலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கும் நம் பலத்தை நிரூபித்து விட்டால், தானாகவே நிர்வாகிகள் அனைவரும் நம் பக்கம் வந்துவிடுவார்கள், எனவே கூட்டத்திற்கான ஏற்பாடுகளும், வரவேற்பும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என ஈபிஎஸ் கூறியுள்ளாராம்.
Recommended Video

மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு
இதையொட்டி தென் மாவட்ட மா.செக்களிடம் ஏற்பாடுகளைச் செய்யும்படி கட்டளை இட்டிருக்கிறாராம் ஈபிஎஸ். விரைவில் அதற்கான தேதியும் உறுதிய்செய்யப்பட்டு சொல்லப்படும் என மா.செக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஈபிஎஸ்ஸின் சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications