• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பெருத்த அமைதி.. சத்தமே இல்லாத சசிகலா.. குழம்பி போய் தவிக்கும் தினகரன்.. என்னாச்சு..!

|

சென்னை: தினகரன் ஏகப்பட்ட குழப்பத்தில் இருக்கிறாராம்.. இதற்கு காரணம் தன்னுடைய சித்தியின் மவுனம்தான் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்..!

கடந்த முறை எம்பி தேர்தலின்போதே மாஸ் காட்டியவர் டிடிவி தினகரன்.. தினகரனை பொறுத்தவரை, இந்த முறை தேர்தலுக்கு நிறைய கணக்குகளை போட்டு வைத்திருக்கிறார்...

அதிமுகவில் இணைந்தாலும் சரி, அமமுக தனித்து களம் கண்டாலும்சரி, தனக்கான முக்கியத்துவத்தை இந்த முறை நிலைநாட்டுவது என்றும், அதை சசிகலாவின் தயவில் எளிதாக நகர்த்தி கொண்டு போய் விடலாம் என்றும் பிளான் வைத்திருந்தார்.

சசிகலா இணைப்பு.. அந்த 3 மணி நேரம்.. அதிமுகவுடன் அமித் ஷா பேசியது என்ன? பின்னணியை உடைத்த முருகன்!

 சிறை

சிறை

இதற்காகவே சிறையில் இருந்து சசிகலா வருவதற்கு முன்பிருந்தே ஆயத்தமானார்.. ஆஸ்பத்திரியில் இருந்து ரிசார்ட்டுக்கு அழைத்து சென்றது முதல், சென்னையில் ரோடு ஷோ நடத்தியவரை எல்லாமே தினகரன் ஏற்பாடுதான். சசிகலா விருப்பத்தின்பேரில் இதை எல்லாம் அவர் செய்யவில்லை.. மாறாக, ஆதரவாளர்களிடம் உள்ள செல்வாக்கை நிரூபிக்கவே சொந்த செலவில், சொந்த முயற்சியில் இறங்கினார்..

ஆலோசனை

ஆலோசனை

எனினும் இதையெல்லாம் பார்த்து சசிகலா மனம் குளிரவே செய்தார்.. சற்று உணர்ச்சிப்பட்டதாகவும் தெரிகிறது.. ஆனால், அதோடு சரி.. சசிகலா சத்தத்தையே காணோம்.. எந்த வித முக்கிய ஆலோசனையும் நடத்தாமல் இருந்தார். அதற்கேற்றபடி அதிமுகவிலும் அவரது வருகையை யாரும் விரும்பவில்லை... பாஜகவும் ஒரு கட்டத்தில் கட்சிகள் இணைப்பு முயற்சியை கைவிட்டது.

 வாய்ஸ்

வாய்ஸ்

எனவே, எப்படியும் அமமுகவுக்கு "வாய்ஸ்" தருவார் என்றே தினகரன் நம்பி உள்ளார்.. கட்சி தொடங்கியபோதே, தலைவர் போஸ்டிங்கிற்கான இடத்தை சசிகலாவுக்கு ஒதுக்கி வைத்துவிட்டார்.. எப்போது வேண்டுமானாலும் அந்த பொறுப்பை அவர் ஏற்பார் என்றும் நம்பி உள்ளர்.. பொதுக்குழுவை கூட்டினால், அந்த மீட்டிங்கில் சசிகலாவுக்கு தரப்படும் புதிய பொறுப்பு பற்றி முடிவெடுக்கலாம் என்றும் ஒரு யோசனையில் உள்ளார்.

 போட்டி

போட்டி

என்னதான், அமமுக தனித்து போட்டி, கூட்டணி வைத்து போட்டி, விருப்ப மனு தாக்கல்,என தேர்தல் வேலையில் இறங்கி வந்தாலும், சசிகலா அமைதியாகவே இருக்கிறாராம்.. பிரச்சாரத்திற்கு வருவார் என்றும் தினகரன் நம்பி கொண்டுள்ளார்.. ஆனால், சசிகலாவோ, அதிமுக பொதுச் செயலாளர் விஷயம் தொடர்பான வழக்கில் தனது கவனத்தை குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

குழப்பம்

குழப்பம்

அதிமுகவின் லெட்டர் பேடில் ஒரு அறிக்கையை வெளியிட்டவும் மொத்தமாக அப்செட் ஆகிவிட்டாராம் தினகரன்.. எனினும் தன் முயற்சியை கைவிடாமல் இருக்கிறாராம்.. எப்படியாவது சசிகலாவின் ஆதரவை பெற்றுவிடுவது, அவரை பிரச்சாரத்துக்கு அழைத்து செல்வது, அமமுகவின் தனித்துவத்தை வெளிப்படுத்துவது, தன்னை ஒரு தலைவராக அதன்மூலம் நிரூபிப்பது என்பதுதான் தினகரனின் ஒரே முடிவாக இருப்பதாக தெரிகிறது. பார்ப்போம்..!

 
 
 
English summary
Why is Sasikala silent about AMMK
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X