உயர் நீதிமன்ற உத்தரவு இன்னும் கைக்கு வரல.. அதனால.. மாரிதாசுக்கு ஜெர்க் கொடுத்த போலீஸ்- என்ன நடந்தது?
சென்னை: யூ டியூபர் மாரிதாஸ் மீதான 2வது வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் ரத்து செய்த நிலையில், மாரிதாஸை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
Maridhas Answers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ் பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்தின் போது தமிழ்நாடு குறித்து தவறுதலாக ட்விட் செய்ததாக புகார் வைக்கப்பட்டது. இதில் கைது செய்யப்பட்டவர் அந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டார்.
யூ டியூபர் மாரிதாஸ் மீதான இந்த் வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் ரத்து செய்தார். மாரிதாஸ் செய்த ட்விட்டில் எந்த தவறும் இல்லை என்று கூறி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்
அவரின் ட்விட்டில் தவறு இல்லை என்று கூறிய நீதிபதி வழக்கை ரத்து செய்தார். ஆனால் இன்னொரு தனியார் தொலைக்காட்சி தொடுத்த போலி மெயில் வழக்கிலும் இவர் கைது செய்யப்பட்டு 27ம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் மாரிதாஸ் கொரோனா காலத்தில் தப்லிக் ஜமாத் அமைப்பினர் கொரோனாவை பரப்பியதாக மாரிதாஸ் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

மீரான் கொடுத்த புகார்
கடந்த ஆண்டு மீரான் என்பவர் இதற்கு எதிராக புகார் அளித்த நிலையில் மாரிதாஸ் மேலப்பாளையம் காவல் நிலைய காவலர்கள் மூலம் மூன்றாவது வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்குதான் நேற்று மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் மூலம் மீண்டும் ரத்து செய்யப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று உத்தரவிட்டு நீதிபதி வழக்கை ரத்து செய்தார்.

ஆனால் என்ன
ஆனால் இந்த மேலப்பாளையம் வழக்கில் நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றம் 5ல் மாரிதாஸ் முன்பே பெயில் கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். இதில் மாரிதாஸை கஸ்டடியில் எடுக்க வேண்டும் என்று போலீசும் கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த வழக்கு இன்று நடப்பதற்கு முன்பு நேற்றே இந்த எப்ஐஆரையே உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துவிட்டது. இதனால் நெல்லையில் பெயில் வழக்கில் விசாரணை நடக்க வேண்டிய அவசியமே இல்லை.

போலீஸ்
ஆனாலும் சென்னை புழல் சிறையில் இருந்தவரை போலீசார் நெல்லைக்கு அழைத்து சென்றனர்.நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றம் 5ல் மாரிதாஸை ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். இது மாரிதாஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலப்பாளையம் வழக்கில் இருந்து விடுதலை ஆகிவிட்டோம் என்று நினைத்த மாரிதாஸுக்கு மதுரை உயர் நீதிமன்ற ஆர்டர் காப்பி கிடைக்காதது பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

நெல்லை கோர்ட்
அவர் மீதான இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டாலும் நெல்லை கோர்ட்டுக்கு இந்த விவரங்கள் சென்று சேரவில்லை. இதனால் இதை பயன்படுத்தி போலீசார் மாரிதாஸை நெல்லை வரை அழைத்து சென்றனர். நெல்லை கோர்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாரிதாஸ் மீதான வழக்கை 27ஆம் தேதி வரை நெல்லை நீதிபதி ஒத்திவைத்தார். மதுரை உயர் நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிறுத்திவைத்து ஒத்தி வைப்பதாக நெல்லை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மீண்டும் டிரிப்
மதுரை உயர் நீதிமன்ற உத்தரவு வந்தால் மட்டுமே மாரிதாஸ் மீதான இந்த மேலப்பாளையம் வழக்கு முடிவிற்கு வரும். இதையடுத்து மாரிதாஸ் சென்னை புழல் சிறையில் அடைக்க காவல்துறையினர் மீண்டும் அழைத்துச் சென்றனர். இன்னொரு பக்கம் தனியார் தொலைக்காட்சி தொடுத்த போலி மெயில் வழக்கிலும் இவர் கைது செய்யப்பட்டு 27ம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications