Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓ. ராஜாவை தூக்கியடித்த எடப்பாடி.. கையெழுத்திட்டதே ஓபிஎஸ்தான்.. அப்ப சசி?.. மறுபடியும் முதல்ல இருந்தா

சசிகலாவை ஓபி ராஜா சந்தித்து பேசியதன் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ் சகோதரர் ஓபி ராஜா, சசிகலாவை சந்தித்து பேசியுள்ளது பல்வேறு விவாதங்களையும், யூகங்களையும் கிளப்பி விட்டு வருகிறது.

அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைக்கும் முயற்சிகள் தலைதூக்கி வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

அதேபோல, பெரியகுளத்தில் ஓபிஎஸ், அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்த நிலையில் அதிமுகவில் எதிர்பார்ப்பும், பரபரப்பும் தொற்றி கொண்டுள்ளது.

 தீர்மானம்

தீர்மானம்

தேர்தல் தோல்வி காரணமாக சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தேனி அதிமுக மாவட்டச் செயலாளர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, இந்த டென்ஷன் மேலும் எகிறி கொண்டிருக்கிறது. அதிமுகவின் தோல்விக்கு பிளவு தான் காரணம் என்று கூறப்படும் நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் கட்சியில் இணைத்து, அமமுகவை அதிமுகவுடன் இணைத்தால் மட்டுமே கட்சியை பலப்படுத்த முடியும் என்று தொண்டர்கள் ஓபிஎஸிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.

 தொண்டர்கள்

தொண்டர்கள்

கிட்டத்தட்ட தொண்டர்களின் மனநிலைமையும் இதுபோலவே உள்ளது.. பெரும்பாலான மாஜிக்கள், நிர்வாகிகளின் எண்ண ஓட்டமும் இதுபோலவே உள்ளது.. சசிகலா தலைமை ஏற்கவேண்டும் என்று ஒரு வெளிப்படையாகவே சொல்லி வருகிறது.. சசிகலா, தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைத்துக் கொண்டால்தான் கட்சி பலப்படும் என்று நம்பப்படுகிறது.. ஆனால், மீண்டும் சசிகலாவை சேர்க்கக்கூடாது, அதிமுகவுக்கு ஒற்றை தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கவேண்டுமென்று தென் சென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் உட்பட பல்வேறு தரப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

 திடீர் சந்திப்பு

திடீர் சந்திப்பு

இப்படிப்பட்ட சூழலில்தான் ஓபி ராஜா சசிகலாவை சந்தித்துள்ளார்.. சசிகலாவை தனியார் விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் சகோதரரான ராஜா திடீரென சந்தித்து பேசியுள்ளார்... இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.. இப்போது இந்த சந்திப்பு சில கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி வருகிறது.. சசிகலாவுடன் போனில் பேசியதற்கே நிறைய பேரை நீக்கினார்கள் என்றால், ஓபிஎஸ் தம்பி நேரில் சந்தித்துள்ளார் நீக்குவார்களா? என்பதே முதல் கேள்வியாக இருந்தது. .

 என்ன காரணம்?

என்ன காரணம்?

அப்படி நீக்கினால், அதற்கு ஓபிஎஸ் சம்மதிப்பாரா? என்பது அடுத்த கேள்வியாக எழுந்தது.. காரணம் கட்சியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டுமானால், ஒருங்கிணைப்பாளரான அவர்தான் கையெழுத்து போட வேண்டும்... அப்படி கட்சியை விட்டு நீக்கப்படாத பட்சத்தில் திமுக உடைபடுமா என்பது அடுத்த கேள்வியாக இருந்தது.

 அன்வர் ராஜா

அன்வர் ராஜா

இந்நிலையில், ஒரு விஷயத்தை நமக்கு இங்கே நினைவுபடுத்த தோன்றுகிறது.. அதிமுகவின் மூத்த தலைவர் அன்வர் ராஜா.. எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி என 3 ஆட்சி தலைவர்களிடமும் பொறுப்பில் இருந்தவர்.. பல சமயங்களில் இவரது துணிச்சல் பேச்சு அபாரமானவை.. சசிகலாவை ஆதரித்ததால்தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற பேச்சு வலுவாக இருந்தது..

ஆதரவாளர்

ஆதரவாளர்

இந்த பரபரப்பான நேரத்தில்தான், சசிகலா ஆதரவாளருடன் செல்லூர் ராஜு பேசியதாகவும் ஒரு ஆடியோ வெளியானது.. அதில் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருப்பதாகவும், இது தொடர்பாக மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாகவும் செல்லூர் ராஜு குரல் அதில் ஒலித்தது.. அந்த ஆடியோ அதிமுகவுக்குள் மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. உடனடியாக செல்லூர் ராஜு அதற்கு மறுப்பு தெரிவித்தார்... அந்த குரல் என்னுடையது இல்லை என்றார்.. ஆனால், அந்த ஆடியோவில் சசிகலாவுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் ஜெயக்குமாரையும் அவரது தந்தையையும் கடுமையாக விமர்சித்து பேசப்பட்டிருந்தது.

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

அதாவது "தலைவர் சட்டமன்றத்துக்கு போகும் போது செருப்பை கொண்டு எறிந்தவர் ஜெயக்குமார் அப்பா. அதுலாம் எங்களுக்கு தெரியும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.. செல்லூர் ராஜு மறுப்பு சொன்னாலும் ஜெயக்குமார் தரப்பு அவர் மேல் கடும் கோபமாக இருந்தார்.. செல்லூர் ராஜுவை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குங்கள் என்று ஜெயக்குமார் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுப்பதாககூட செய்திகள் வெளியாகின.. ஆனால், அவரை அப்படி எளிதாக நீக்கிவிட முடியாது என்று எடப்பாடி தரப்பு அதற்கு மறுப்பு சொல்லிவிட்டதாக கூறப்பட்டது.

 ஜெயக்குமார்

ஜெயக்குமார்


அதற்கு ஜெயக்குமாரோ, "உங்களை அன்வர் ராஜா ஒரு போன் உரையாடலில் ஒருமையில் பேசினார். அவரை நீங்கள் கட்சியிலிருந்து நீக்கினீர்கள். என்னைப் பற்றியும், என் அப்பா பற்றியும் மிக மோசமாக பேசியுள்ளார். ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறீர்கள்" என்று ஜெயக்குமார் கேட்டாராம்.. ஆக இந்த ஆடியோ விஷயம் உண்மைதான் என்று எடுத்து கொள்வதா? அப்படியே எடுத்து கொண்டாலும் செல்லூர் ராஜு மீது ஏன் நடவடிக்கை இதுவரை இல்லை என்பதே கேள்வி.

 என்ன நடக்க போகிறது?

என்ன நடக்க போகிறது?

செல்லூர் ராஜு மறுப்பு சொன்னதால் அந்த விவகாரம் கைவிடப்படாதாகவே இருந்தாலும், ஓபி ராஜா வெளிப்படையாகவே சசிகலாவை சென்று சந்தித்துள்ளார்.. ஓபிஎஸ் ஆதரவு சசிகலாவுக்குதான் என்பதை கண்கூடாக நிரூபித்து எடப்பாடியிடம் காட்டி உள்ளார்.. இந்த விஷயத்தில் இப்போது எடப்பாடி என்ன செய்ய போகிறார்? ஓபி ராஜா மீது நடவடிக்கை எடுத்தால், கட்சி உடைவது உறுதி.. ஒருவேளை கண்டும் காணாமல் விட்டுவிட்டார் என்றால், அது எடப்பாடி ஆளுமைக்கே அது கேள்விக்குறியாகிவிடும்.. இந்த சந்திப்பு அக்னி பரிட்சையாக மாறியுள்ள சூழலில்தான், ஓ.ராஜாவை கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர்.

 ஓபிஎஸ் நிலைப்பாடு?

ஓபிஎஸ் நிலைப்பாடு?

இதற்கான உத்தரவை ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். ஓபிஎஸ்ஸும் இதில் கையெழுத்திட்டுள்ளார் என்றால், சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார் என்று எடுத்து கொள்வதா? சசிகலாவை கட்சியில் சேர்க்கவே மாட்டார் என்ற முடிவுக்கு ஓபிஎஸ் வந்துவிட்டார் என்பதா? தெரியவில்லை.. காரணம், ஓபிஎஸ் மனநிலை குறித்து யாராலுமே உறுதியான ஒரு முடிவுக்கு வரமுடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

Recommended Video

    சசிகலாவை சந்தித்த ஓ.ராஜா... சகோதரரை கட்சியிலிருந்து நீக்கி ஓ.பி.எஸ் அதிரடி!
    அமைதி

    அமைதி

    எப்போதுமே ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டில் எந்த அளவிற்கு உறுதியாக இருப்பார் என்பதை சொல்ல முடியாது.. இதற்கு முன்பும் எத்தனை விஷயங்களில் சசிகலா இணைப்புக்கு அவர் அச்சாரம் போட்டபோதும் கூட, கடைசி நிமிடத்தில் அது நடக்காமல் போயுள்ளது..அதற்கும் ஓபிஎஸ்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.. ஆக மொத்தம், சசிகலா விஷயத்தில் ஓபிஎஸ்ஸே வாயை திறந்து சொன்னால்தான் உண்மை நிலைப்பாடு தெரியும்.. பார்ப்போம்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+