Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்வர் ராஜாவுக்கு வந்த ஆஃபர்! ஆஃப் செய்த ஓ.பன்னீர்செல்வம்! சட்டை செய்யாத எடப்பாடி பழனிசாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்த அன்வர் ராஜா கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டுள்ள நிலையில், அவரை மீண்டும் இணைப்பதற்கு காய்நகர்த்த தொடங்கியிருக்கிறாராம் ஓ.பன்னீர்செல்வம்.

இதன் வெளிப்பாடாக தான் அண்மையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கூட, தவறு செய்தவர்களை மன்னித்து ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு என்றெல்லாம் அவர் பேசியதாக காரணம் கூறப்படுகிறது.

இதனிடையே எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அன்வர் ராஜா நீக்கப்பட்டது நீக்கப்பட்டது தான் அவரை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என ஜெயலலிதா பாணி அரசியலை கடைபிடிக்கிறாராம்.

 அதிமுக

அதிமுக

அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளரும், எம்.ஜி.ஆர்.காலத்து சீனியருமான அன்வர் ராஜாவை அண்மையில் கட்சியில் இருந்து நீக்கியது அதிமுக தலைமை. எடப்பாடி பழனிசாமியை அன்வர் ராஜா ஒருமையில் பேசிய விவகாரமும், சசிகலா ஸ்டாண்ட் எடுக்கப்போவதாக கிடைத்த தகவலும் தான் அன்வர் ராஜா மீதான எடப்பாடி பழனிசாமியின் கோபத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத அன்வர் ராஜா, தனது அலைபேசியை மகனிடம் கொடுத்து விட்டு 15 நாட்களுக்கும் மேலாக மவுன விரதம் இருந்தது போல் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.

ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்


அன்வர் ராஜாவுக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும் வகையில் ஆதரவாளர்கள் வட்டமும் இல்லை. இதனால் பெங்களூரு புகழேந்தி மட்டுமே அவ்வப்போது அன்வர் ராஜாவிடம் பேசி வந்திருக்கிறார். இந்நிலையில் அன்வர் ராஜாவை திமுகவுக்கு இழுப்பதற்கான நகர்வுகளும் நடந்திருக்கின்றன. ஆனால் மாவட்ட அமைச்சரான ராஜகண்ணப்பன் தரப்புக்கும், மாவட்டச் செயலாளரான முத்து ராமலிங்கம் தரப்புக்கும் இடையே இதில் டேர்ம் ஒத்துப்போகாததால் அப்படியே கிடப்பில் இருக்கிறது அந்த திட்டம்.

ஓ.பி.எஸ்.க்கு தூது

ஓ.பி.எஸ்.க்கு தூது

அன்வர் ராஜாவுக்கு அடுத்த கட்சியிலிருந்து வரும் ஆஃபர்கள் குறித்து அவரது தரப்பிலிருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தூது அனுப்பப்பட்டதாம். அதற்கு அவசரப்பட வேண்டாம், பொறுமையாக இருக்கச் சொல்லுங்க நல்லது நடக்கும் என ஓ.பி.எஸ்.ஸிடமிருந்து பதில் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அன்வர் ராஜாவை மீண்டும் இணைக்கும் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி துளியும் ஆர்வம் காட்டவில்லையாம்.

Recommended Video

    ராமநாதபுரம்: தலைவா, கட்சியிலிருந்து விலகி இருக்க முடியல... அன்வர் ராஜாவின் அதகள போஸ்டர்!
    பதவி காலி

    பதவி காலி

    அன்வர்ராஜா அதிமுகவில் வகித்து வந்த சிறுபான்மை பிரிவு செயலாளர் பதவி இன்னும் காலியாகவே உள்ளதால், அந்தப் பதவிக்கு ஏகப்போட்ட போட்டிகளாம். அதிமுக செய்தித் தொடர்பாளராக இருக்கும் ஜவஹர் அலி உள்ளிட்ட இன்னும் பல சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் அந்தப்பொறுப்புக்கு குறிவைத்து காய் நகர்த்துகிறார்களாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+