• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"கிளீன் போல்ட்?".. தலைகீழாக நின்னு பார்த்தும்.. 20 தொகுதிகளிலும் பாஜகவுக்கு ஏமாற்றம்தானோ!

|

சென்னை: தமிழக பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் எத்தனை இடங்களில் வெற்றி வாய்ப்பை பெறும் என்ற பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக பாஜக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.. இந்த 20 சீட்டுக்களை பெறுவதற்காக கடந்த 6 மாதமாகவே பல்வேறு முயற்சிகளை பாஜக எடுத்து வந்தது.. பாஜக தலைவர்கள் இதற்காகவே பலமுறை தமிழகம் வந்து போனார்கள்.

இந்த 20 சீட்களை பாஜக பெற்றதுமே, திருமாவளவன் ஒன்று சொன்னார்.. பாஜக 20 சீட் என்றதுமே, அது திமுகவின் தொகுதிகள் என்று உறுதியாகிவிட்டது.. 20-ல் ஒன்றில்கூட பாஜக வெற்றி பெறாது.. அதற்கு காரணம் அந்த கட்சி தன் கொள்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்ய முடியாது.. சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியாது.. வெறுப்பு அரசியலை நம்பி யாரும் ஓட்டு போட முடியாது.. முக்கியமாக, தமிழ்நாட்டில் இவங்க வாலாட்டவே முடியாது" என்றார். இந்த பேச்சை இப்போதும் பிரச்சாரங்களில் திருமா பேசி வருகிறார்.

திருமா

திருமா

பாஜகவுக்கு நேர் எதிர் கூட்டணி சார்பாக திருமா இப்படி பேசுகிறார் என்றே எடுத்து கொண்டாலும், வெளிவந்து கொண்டிருக்கும் கருத்து கணிப்புகளும் பாஜகவுக்கு ஆதரவானதை தரவில்லை என்பதுதான் கள நிலவரம்... மொத்தம் 3 இடங்கள் வேண்டுமானால் பாஜகவுக்கு இழுபறி ஏற்படும் நிலை ஏற்படும் என்று அரசியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதற்கேற்றபடி நேற்றைய சத்தியம் டிவியின் கருத்து கணிப்புகளும் இதைதான் மெய்ப்பித்து விட்டு போயுள்ளது.

நயினார்

நயினார்

இதை வைத்து பார்க்கும்போது, வரப்போகும் தேர்தலில் இதில், நயினார் நாகேந்திரன் நிச்சயம் நெல்லையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள்.. நயினார் நாகேந்திரன் அரசியலில் சீனியர்.. பரிச்சயமானவர்.. அதிமுகவில் இருந்த போதும் சரி, பாஜகவில் இருந்தபோதும் சரி, செல்வாக்குடன் வலம் வருபவர்.. அதனால்தான் நெல்லையை எடுத்து தந்தது பாஜக தலைமை.. வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னாடியே மனு தாக்கல் செய்ய போன நயினார் மீது பெருத்த நம்பிக்கையை பாஜக தலைமை வைத்துள்ளது. எனவே, இந்த நெல்லையில் நயினார் நிச்சயம் மாற்று கட்சிகளுக்கு ஒரு ஜெர்க் தருவார் என்கிறார்கள்.

வானதி

வானதி

அதேபோல, கன்னியாகுமரியிலும் பாஜகவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.. இங்கு திமுக கூட்டணிக்கு பாஜக டஃப் தரும் அளவுக்கு முன்னேறுமே தவிர, மெகா வெற்றி என்பதே கருத்து கணிப்புகள் சொல்லும் உண்மையும்.. பாஜக போட்டியிடும் முக்கியமான தொகுதிகளில் ஒன்று கோவை தற்கு.. அன்றைய சீனியர் வானதியை முந்திக் கொண்டு போய் கொண்டிருக்கிறாராம் இன்றைய ஜூனியர் கமல். இது பாஜகவுக்கு பெருத்த அடியாகவே பார்க்கப்படுகிறது.. பாஜகவின் ஆதரவு உள்ள மண், வானதியின் சொந்த தொகுதி, இந்து அமைப்புகளின் ஆதரவு பெற்ற தொகுதி என்ற பல சாதகங்கள் இருந்தபோதிலும், கமலின் வளர்ச்சி அபாரமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

குஷ்பு

குஷ்பு

இதில் ஆயிரம் விளக்கு தொகுதியையும் சேர்த்து கொள்ளலாம்.. குஷ்புக்கு சேப்பாக்கத்தை தராமல் விட்டது மிகப்பெரிய தவறு என்றும்கூட சொல்லலாம்.. அங்கு உதயநிதியை குஷ்பு வெற்றி பெற முடியாவிட்டாலும், ஓரளவு வாக்குகளை பிரித்திருப்பார்.. அதனால்தான், முன்கூட்டியே அந்த தொகுதியில் இறங்கி வேலையும் செய்ய ஆரம்பித்தார்.. கடைசியில் திமுகவின் இன்னொரு கோட்டையான ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு நிறுத்தப்பட்டும், குஷ்புவை பாஜகவை மக்கள் நிராகரித்துள்ளதாகவே தெரிகிறது. தனிப்பட்ட செல்வாக்கு கூட பாஜகவுக்கு பலன் தரவில்லை.

 அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

ஆக மொத்தம், இந்த 20 தொகுதிகளிலும் அதிமுகவின் பலத்தில்தான் சொற்ப தொகுதிகளில் கூட பாஜக சற்று போராடும் நிலைக்கு வந்துள்ளது... மற்றபடி பாஜகவின் சொந்த செல்வாக்கு தமிழகத்தில் இல்லவே இல்லை, அந்த கட்சி வளரவே இல்லை என்பதை இந்த தேர்தல் நிரூபிப்பதாகவே அமையும்... அதிமுக இல்லாமல் பாஜக தனித்துப் போட்டியிட்டிருந்தால் மிகப் பெரிய சரிவையே சந்தித்திருக்கும்... எனவே அதிமுகவை வற்புறுத்தி கூட்டணி வைத்துக் கொண்டதால் அதற்கு கொஞ்சமாவது கெளரவம் மிஞ்சியிருக்கிறது.

 வளர்ச்சி?

வளர்ச்சி?

தனித்து போட்டியிடும் அளவுக்கு பாஜக வளர்ந்துள்ளது என்றும், எங்களுக்கு 70 சீட் வேண்டும் என்றும் முருகன் அன்றைக்கு அடம் பிடித்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. இந்த தேர்தலையும் தாண்டி, தமிழக பாஜக செல்லும் தூரம் அதிகமாக இருக்கிறது என்பதே உண்மை...!

 
 
 
English summary
Will BJP Win in 20 Constitutions in Tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X