முற்றும் துறந்த மனிதனாக முயற்சி.. ஆன்மீக ஆட்சி அமைப்பேன்.. அண்ணாமலை பரபர அறிவிப்பு! ஆஹா அப்போ ரஜினி!
சென்னை: தமிழ்நாட்டில் ஆன்மீக ஆட்சியை அமைக்க போவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்மீக அரசியல் செய்ய போவதாக சொல்லி வந்தவர் நடிகர் ரஜினிகாந்த். 2019, 2020ல் இவர் ஆன்மீக அரசியல் செய்ய போவதாக தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தார்.
திராவிட அரசியலுக்கு எதிராக இவரின் ஆன்மீக அரசியல் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார்.
அரசியலுக்கு வர மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி ரஜினிகாந்த் அரசியலில் நுழையும் முன்பே ரிட்டயர்ட் ஆனார்.

ஆன்மீக அரசியல்
இதோடு ஆன்மீக அரசியலுக்கு முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் திடீரென ஆளுநர் ஆர். என் ரவியை நடிகர் ரஜினிகாந்த் நேற்று முதல்நாள் சந்தித்தார். ஆளுநரை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் ரஜினிகாந்த் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தவர்.. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இருந்தாலும் இதில் அரசியல் பேசினோம். ஆனால் அதை பற்றி உங்களிடம் சொல்ல முடியாது என்றார். அவரின் இந்த பேட்டி பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும்
மீண்டும் ரஜினிகாந்த் அரசியலில் வாய்ஸ் கொடுக்க போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியலுக்கு வர மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறிவிட்டார். இதனால் அவர் நேரடி அரசியலுக்கு வராமல் பின்னால் இருந்து இயக்க போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினி பேட்டி பல சந்தேங்களை எழுப்பி உள்ள நிலையில்தான் திடீரென ஆன்மீக ஆட்சி அமைக்க போராடுவேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். திருக்கழுக்குன்றத்தில் சிவனடியார் சிவதாமோதரனை அண்ணாமலை சந்தித்தார். அவர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் ஆன்மீக ஆட்சி அமைய வேண்டும்.

ஆன்மிகம்
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நமது குருமார்கள், ஆன்மீக ஆட்சியை கேட்கிறார்கள். ஆன்மீகம் ஆட்சியில் ஒரு பங்கு வகிக்கும். இதுதான் ஆன்மீக ஆட்சி. இது மக்களுக்கு, சமுதாயத்திற்கான நலன் சிந்தனை கொண்டது. ஜாதி, மதம் தாண்டி மனிதர்களை இணைப்பது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் அரசியல்தான் ஆன்மீக அரசியல். நம்முடைய சொத்துக்களை பூட்டி வைப்பது ஆன்மீக அரசியல் கிடையாது. மக்களுக்கு வளங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும்.
Recommended Video

ஆட்சி
இப்படி ஒரு ஆட்சியை அமைக்கவே பாஜக போராடிக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் இடையே ஆன்மீக பற்று குறைவாக உள்ளது. இதை மாற்ற வேண்டும். முற்றும் துறந்தவர்தான் நல்ல ஆட்சியை கொடுக்க முடியும். சமநிலையில் இருப்பவர் மூலம்தான் ராமராஜ்ஜியம் பிறக்கும். நானும் முற்றும் துறந்த மனிதனாக செயல்பட முயற்சிப்பேன். அந்த நிலையை அடையும் ஆன்மீக பாதையில் செல்ல முயல்வேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
-
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
சுந்தர் சி யின் மாஸ்டர் பிளான்.. ரஜினி படத்தில் இருந்து விலக காரணம் இதுவா? அரசியலில் எதிரெதிர் துருவம்! பின்னணி -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா?












Click it and Unblock the Notifications