சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐடி நிறுவனங்கள் செம்ம ஹேப்பி அண்ணாச்சி.. வீட்டில் இருந்தே வேலை செய்வது நிரந்தரமாகிறதா?

Google Oneindia Tamil News

கொரோனாவால், இனி வரும் காலத்தில் ஒரே இடத்தில் பலரும் வேலை செய்யும் முறைகளை நிரந்தரமாக இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது. அதாவது வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை நிரந்தரமாக வாய்ப்பு உள்ளது.

Recommended Video

    IT ,BPO ஊழியர்களுக்கு டிசம்பர் வரை Work from home-க்கு அனுமதி - மத்திய அரசு

    இந்த work from home முறை வரும் டிசம்பர் 31ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முறையால் நிறைய லாபம் அடைந்துள்ள ஐடி நிறுவனங்கள், நிரந்தரமாக கடைபிடிக்க விரும்பும் வாய்ப்பு உள்ளது.

    கொரோனாவால், இனி வரும் காலத்தில் ஒரே இடததில் பலரும் வேலை செய்யும் முறைகளை நிரந்தரமாக இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது. அதாவது வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை நிரந்தரமாக வாய்ப்பு உள்ளது.

    ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா உறுதி - தொடர்பில் இருந்தவர்கள் கிலி ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா உறுதி - தொடர்பில் இருந்தவர்கள் கிலி

    கூட்டம் ஆகாது

    கூட்டம் ஆகாது

    கண்ணுக்குத் தெரியாத வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் கொரோனா என்ற பெரும் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். ஒருவர் விடும் மூச்சுக்காற்று இப்போது இன்னொருவரின் உயிருக்கு ஆபத்தான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் குழுவாக வேலை செய்வது, கூட்டம் கூடுவது இனி ஆகாத ஒன்றாக மாறிவிட்டது. இதனால் நாடு முழுவதும் ஐடி நிறுவனங்கள் work from home என்று சொல்லப்படும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளன.

    ஐடி நிறுவனங்கள் உற்சாகம்

    ஐடி நிறுவனங்கள் உற்சாகம்

    இந்த நடைமுறை கடந்த மார்ச் 3வது வாரத்தில் இருந்து நடைமுறையில் இருக்கிறது. முதலில் வேறு வழியில்லாமல் இதை நடைமுறைப்படுத்திய ஐடி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. நிறைய லாபம் கிடைத்துள்ளது. ஊழியர்களுக்கும் சொந்த ஊரில் வேலை பார்க்கும் வாய்ப்பையும் work from home முறை வழங்கி இருக்கிறது. தேவைப்படும் போதெல்லாம் பணியில் இருக்க வேண்டும் என்பதை ஏற்று ஊழியர்கள் பணியாற்றுவதால் நிறுவனங்களுக்கு நிறைய நன்மைகள் நடந்துள்ளன.

    மின்சார செலவு இல்லை

    மின்சார செலவு இல்லை

    பல ஐடி நிறுவனங்கள் அலுவலகங்களை மூடிவிட்டன. வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் என்று கூறிவிட்டன. எப்போது மீண்டும் அலுவலகம் சென்று வேலை செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாத நிலை உள்ளது. இந்நிலையில் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய உத்தரவிட்டதால் அலுவலக வாடகை மிச்சம், ஆபிஸ் பராமரிப்பு செலவு மிச்சம், பாதுகாவலர்களை நியமிக்க தேவையில்லை. கேண்டீன் செலவு இல்லை. மின்சார செலவு, போக்குவரத்து செலவு இல்லை. பல வகையில் நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளன.

    டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

    டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

    எனவே வருங்காலத்தில் சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பெரு நகரங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில் குறிப்பிடத்தக்க அளவினரை நிரந்தரமாக வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்த வாய்ப்பு உள்ளது. முதற்கட்டமாக தற்போது இந்த work from home முறை வரும் டிசம்பர் 31ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை work from home முறைக்கு மாறினால் அது பெருநகரங்களில் உள்ள வாழ்வியல் முறையில் கற்பனைக்கு அப்பாற்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தி விடும். அதுமட்டுமல்லாமல் சென்னை போன்ற நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். அதேநேரம் சிறிய நகரங்கள், கிராமங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நிரந்தமாகுமா என்பதை காலம் தான் முடிவு செய்யும்.

    English summary
    work from home norms for IT, ITes companies, extends till December 31. Is working from home permanent? how come this changes ?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X