இப்படி எல்லாம் கூட நடக்குமா? மேட்சில் நடந்த செம சம்பவம்.. மிரண்டு போன அஸ்வின்.. பின்னணி!
சென்னை: நேற்று ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய வைரலாகி உள்ளது. இந்திய வீரர் அஸ்வினும் இதை பற்றி ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video
நியூசிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி 20 உலகக் கோப்பை நேற்று மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.
நேற்று டாஸ் தோல்வி அடைந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து சிறப்பாக ஆடி 172/4 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா 18.5 ஓவரில் எளிதாக 173-2 ரன்கள் எடுத்து வென்றது.

எப்படி
இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டுமே சுமாராக இருந்தது. நியூசிலாந்து அணியில் நேற்று கேன் வில்லியம்சன் மட்டுமே கேப்டன் இன்னிங்ஸ் ஆடாமல் போய் இருந்தால் நியூசிலாந்து இதை விட படுமோசமாக தோல்வி அடைந்து இருக்கிறது. நேற்று 48 பந்தில் 85 ரன்கள் எடுத்து கேன் வில்லியம்சன் அவுட் ஆனார். இதில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி அடக்கம்.

வேகம்
இதில் வில்லியம்சன் ஆடிய முதல் 19 பந்தில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்த 20 பந்துகளில் சிக்ஸ், பவுண்டரி என்று 50 ரன்கள் எடுத்தார். அந்த அளவிற்கு கேன் வில்லியம்சன் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அதிலும் நேற்று மேக்ஸ்வெல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்தார். அதில் ஒரு சிக்ஸ் ஒற்றை கையில் சிக்ஸ் அடித்தார்.

நோ பால்
அதற்கு முன் ஸ்டார்க் பவுலிங் செய்த 11வது ஓவரில் கேன் வில்லியம்சன் அடுத்தடுத்து ஹாட் டிரிக் பவுண்டரி அடித்தார். 4வது பந்து, 5வது பந்தில் பவுண்டரி அடித்தார். அதன்பின் 6வது பந்தில் மீண்டும் கேன் வில்லியம்சன் பவுண்டரி அடித்தார். 145 கிமீ வேகத்தில் வந்த புல் டாஸ் பந்தை வில்லியம்சன் சிக்ஸ் அடித்தார். நெஞ்சு வரை வந்த பந்தை அப்படியே திருப்பி பவுண்டரி அடித்தார்.

அஸ்வின்
இந்த சம்பவம் குறித்து இந்திய வீரர் அஸ்வினும் மிரண்டு போய் ட்வீட் செய்துள்ளார். அதில், கேன் வில்லியம்சன் எப்படி இப்படி ஒரு ஷாட்டை ஹை புல் டாஸ் பந்தில் அடித்தார். அதுவும் மிட் விக்கெட் திசையில் எப்படி இதை பவுண்டரி பறக்க விட முடிந்தது, என்று அஸ்வின் வியப்பாக கேள்வி எழுப்பி உள்ளார். நெட்டிசன்கள் பலர் இந்த பதிலில் கேன் வில்லியம்சனின் ஷாட்டை பாராட்டி உள்ளனர்.

வில்லியம்சன்
வில்லியம்சன் அடித்த இந்த ஒற்றை பவுண்டரி அரங்கத்தையே அதிர வைத்தது. ஸ்டார்க் போன்ற பவுலரின் பந்தில்.. அதிலும் புல் டாஸ் பந்தில் எளிதாக வில்லியம்சன் பவுண்டரி அடித்தது பலரையும் கவர்ந்தது. அதிலும் இடது கையில் காயத்தோடு வில்லியம்சன் இந்த பவுண்டரியை வில்லியம்சன் அடித்தது வைரலாகி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications