வென்டிலேட்டரில் பவணி எப்படி இருக்கா?.. பெற்றோரை தர்ம சங்கடப்படுத்துக்குள்ளாக்கும் யாஷிகா ஆனந்த்!
சென்னை: மாமல்லபுரம் அருகே கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்திற்கு மீண்டும் எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் அவரது தோழி வள்ளிச் செட்டி பவணி எப்படி இருக்கிறார் என்பது குறித்து யாஷிகா விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video
நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 24 ஆம் தேதி இரவு மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு ரிசார்ட்டில் இரவு பார்ட்டியை முடித்துக் கொண்டு 3 நண்பர்களுடன் காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அதிவேகமாக காரை ஓட்டியதால் நிலைத்தடுமாறி தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் யாஷிகா ஆனந்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அது போல் அவருடன் இருந்த இரு ஆண் நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

பவணி இறப்பு
யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே இறந்தார். அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியரான பவணி கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர்தான் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருந்தார். விபத்தில் யாஷிகாவுக்கு இடுப்பிலும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

அறுவை சிகிச்சை
எலும்பு முறிவை சரி செய்ய அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில தினங்கள் கழித்து அவருக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இதுகுறித்து யாஷிகாவின் தங்கை ஓஷீன் ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதபடிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் அறுவை சிகிச்சை
அதில் யாஷிகாவுக்கு ஒரு அறுவை சிகிச்சை கடவுள் கிருபையால் நல்லபடியாக முடிந்தது. ஆனால் அவருக்கு இன்னும் நிறைய எலும்பு முறிவுகள் இருப்பதால் அதற்காக மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடவுளிடம் பிரார்த்தனை
எனவே நிறைய அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளதால் அனைவரும் தயவு செய்து அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து யாஷிகாவின் குடும்பத்தினர் கூறுகையில் யாஷிகா சுயநினைவுடன் இருக்கிறார். பவணி இறந்த விவகாரம் அவருக்கு தெரியாது.

பவணி எப்படி இருக்கிறார்
எங்களிடம் பவணி எப்படி இருக்கிறார் என யாஷிகா கேட்டார். அதற்கு நாங்கள் அவர் வெண்டிலேட்டரில் இருப்பதால் சொல்லியுள்ளோம். யாஷிகாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் அதிர்ச்சியான விஷயங்களை சொல்ல வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 2 மாதங்கள் கழித்துதான் யாஷிகாவால் நடக்க முடியும். 3 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications