அதிதீவிரமடையும் யாஸ் புயல்... தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் இடி மின்னலுடன் மழை
வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர புயல் அதிதீவிரமாக வலுப்பெற்றுள்ளது. யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து நாளை பிற்பகல் பாரதீப் சாகர் இடையே பாலசுருக்கு அருகே கரையைக் கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது. பல மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கினாலும் சில மாவட்டங்களில் பூமி குளிர மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமநாதபுரம் பகுதிகளில் மழை பெய்துள்ளது.
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26ஆம் தேதி முதல் முதல் வருகின்ற 29ஆம் தேதி வரை கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

பலத்த காற்று
வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு அறிவிப்பு
இன்று முதல் வருகின்ற 29ஆம் தேதி வரை குமரிக்கடல் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 முதல் 27ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.

சூறாவளிக்காற்று
26ஆம் தேதி வடமேற்கு வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்கம் கடலோரப்பகுதிகளில் மணிக்கு 155 முதல் 165 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். 25 முதல் 29 ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும்
மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து நாளை பிற்பகல் பாரதீப் - சாகர் இடையே பாலசுருக்கு அருகே கரையைக் கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications