திவ்யா எனக்கு வேண்டும்.. ஈஸ்வரால் மன உளைச்சல்..வில்லனா? ஹீரோவா..உங்களுக்கே தெரியும்.. அர்ணவ்
சென்னை: என்னுடைய மனைவி திவ்யாவும் குழந்தைகளும் வேண்டும் என்றும் ஈஸ்வர் செய்யும் டார்ச்சரால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார் செல்லம்மா டிவி சீரியல் நடிகர் அர்ணவ். நான் ஹீரோவா? வில்லனா என்பது உங்களுக்கே தெரியும் என்றும் நடிகர் அர்ணவ் கூறியுள்ளார்.
டிவி சீரியல் தொடரை போல தினசரியும் நீண்டு கொண்டே போகிறது செல்லம்மா சீரியல் நாயகன் அர்ணவ், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா இடையேயான பஞ்சாயத்து. அர்ணவ் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை திவ்யா வைக்க அதை ஆதாரங்களுடன் மறுத்து வருகிறார் அர்ணவ்.
நடிகை அன்ஷிதா உடன் தொடர்பில் இருக்கும் அர்ணவ், தன்னை ஏமாற்றுவதாக கூறி வருகிறார் திவ்யா. அதை அர்ணவ் உடன் நடிக்கும் சக நடிகைகளும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசினார் அர்ணவ். காவல்நிலையில் அளிக்கப்பட்ட புகாருக்கு தான் விளக்கம் அளித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

எல்லாமே பொய்
எனக்கு மனைவி குழந்தைகள் வேண்டும். என்னுடைய குழந்தைக்கு நான் தகப்பனாக இருக்க வேண்டும் என்று கூறிய அர்ணவ், பொய்யான தகவலை பரப்புகிறார்கள். என் குழந்தைக்கு ஏதாவது ஒன்று ஆனால் ஈஸ்வர்,வக்கீல் பிரியாதான் பொறுப்பு என்று கூறினார். அவர் நிறைய டிப்ரசனில் இருக்கிறாள். நான் அவளுடன் வாழக்கூடிய ஏற்பாட்டினை செய்யுங்கள். இதுதான் என்னுடைய கடைசி பிரஸ் மீட்டாக இருக்க வேண்டும்.

காவல்நிலையத்தில் விசாரணை
நான் எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன்தான் செய்கிறேன். குழந்தையை கலைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. காவல்துறையினர் விசாரணை போய் கொண்டிருக்கிறது. அவளுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறது. அதை யாருமே புரிந்து கொள்ள மறுக்கின்றனர். எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

பயப்படவில்லை
நான் தவறே செய்யவில்லை அதனால் நான் பயப்படவில்லை. எந்த தப்பும் செய்யாத என்னை தவறான குற்றச்சாட்டு வைக்கின்றனர். கடவுள் இருக்கிறார். அவர் ஆஜராகும் போது உண்மை தெரியவரும். நான் அடிக்கவேயில்லை. ஒரு விரல் கூட படவில்லை. திவ்யா பொய் கேஸ் போடுகின்றனர். ஒரு கர்ப்பிணி எப்படி கை வைக்க முடியும். மாத்தி மாத்தி பேசுகிறார்கள். பொய்யான தகவலைத்தான் பரப்புகின்றனர்.

எல்லாத்துக்கும் ஆதாரம்
என்னைப்பற்றி தவறாக கூறும் போது நான் எப்படி பொறுமையாக இருக்கமுடியும். செப்டம்பர் 22ஆம் தேதியன்று நான் திவ்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதற்கான ஆதாரம் உள்ளது. நான் உணவு வாங்கித்தரவில்லை என்றும் வெளியே எங்கும் அழைத்துச்செல்லவில்லை என்றும் குற்றம் சாட்டினார் அதற்கான ஆதாரம் உள்ளது.

மனநல பாதிப்பு
திவ்யா மீது நான் எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவரே கூறியுள்ளனர். அவளுடைய வாழ்க்கை சீரழிய வேண்டும் என்பது என் எண்ணமில்லை. திவ்யாவிற்கு கவுன்சிலிங் தர வேண்டும். ஈஸ்வர் என்னுடைய நண்பன்தான் மிரட்டுகிறான். அசிங்கமாக பேசுகிறான். ரொம்ப கேவலமாக பேசுகிறான். இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்கிறான் அவன் யார் என் வாழ்க்கையில் தலையிடுவதற்கு என்றும் அர்ணவ் கேள்வி எழுப்பினார்.

ஈஸ்வரால் மன உளைச்சல்
நாங்கள் இணைய வேண்டும் என்று சொல்லும் ஈஸ்வர் அவனுடைய வாழ்க்கையில் ஒழுங்காக வாழ்கிறானா? எனககு தவறான தொடர்பு இருப்பதாக சொல்வது பொய். என் மனைவியை நான் சந்தேகப்படவேயில்லை. நன்றாக படித்த ஈஸ்வர் ஏன் இப்படி அசிங்கமாக பேசுகிறான் எனக்கு அதனால் மன உளைச்சலை தருகிறது. அவனால் எனது குடும்பம் பிரிந்து விடும் என்று நான் புகார் அளித்துள்ளேன்.

அவன் குடும்பமே சரியில்லை
அவன் நன்றாக இருந்தால் இப்போது அவனது மனைவியிடம் வாழ்ந்திருக்கலாம். ஈஸ்வர் வக்கீல்தான் இப்போது எனது மனைவி திவ்யாவிற்கு ஆஜராகிறார். எனது மனைவி திவ்யாவிடம் பேசி டாமினேட் செய்வது மன உளைச்சலாக உள்ளது. என் மனைவியுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே நான் இப்போது ஊடகங்களை சந்திக்கிறேன். நான் வில்லனா? ஹீரோவா என்பது உங்களுக்கே தெரியும் என்றும் அர்ணவ் கூறியுள்ளார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?











Click it and Unblock the Notifications