சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எமனாக மாறிய புரோட்டா..சாப்பிட்ட சில நொடியில் பலியான இளைஞர்..சென்னையில் சோகம்

புரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்தில் இளைஞர் ஒருவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். இளைஞரின் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: புரோட்டா உணவில் உள்ள தீமைகளைப் பற்றி எத்தனையோ மருத்துவர்கள் கூறினாலும் தமிழகம் முழுவதும் கடைகளில் புரோட்டா விற்பனை அதிகரித்து கொண்டுதான் உள்ளது. சென்னையில் இளைஞர் ஒருவர் புரோட்டா உணவு சாப்பிட்ட இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Youth died within a few seconds of eating ParottaTragedy in Chennai

புரோட்டா சாப்பிட்டு உயிரிழந்த இளைஞரின் பெயர் கார்த்திக் என்பதாகும். 27 வயதான சென்னை கார்த்திக் வியாசர்பாடியை சேர்ந்தவர். புரோட்டாவே எமனாக மாறி அவரது உயிரை காவு வாங்கியுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள உணவுப் பிரியர்களின் விருப்பமான உணவாக பரோட்டா உள்ளது. சாலையோர கையேந்தி பவன்களில் இருந்து ஸ்டார் ஓட்டல்கள் வரை பரோட்டா இல்லாத சைவ,அசைவ உணவகங்களை காண்பதே அரிது.

உவ்வே.. நாய் தின்ற 'ஷவர்மா'.. அப்படியே வாடிக்கையாளர்களுக்கு விற்ற ஓட்டல் - தூத்துக்குடியில் பரபரப்புஉவ்வே.. நாய் தின்ற 'ஷவர்மா'.. அப்படியே வாடிக்கையாளர்களுக்கு விற்ற ஓட்டல் - தூத்துக்குடியில் பரபரப்பு

புரோட்டோவில் பல வகை உண்டு. விலைக்கு எற்ப வெரைட்டி மாறுபாடும். விருதுநகர் எண்ணெய் பரோட்டா, சாதா பரோட்டா, முட்டை, கொத்து, வீச்சு, பன் புரோட்டா என ஏராளமான வகை புரோட்டாக்களை உணவுப்பிரியர்கள் சாப்பிடுவார்கள். புரோட்டா பலரது உயிரை காவு வாங்கியுள்ளது.

கமுதி அச்சங்கோவில் பாண்டி, கடலூரில் வடமாநில தொழிலாளி, கொரட்டூரில் கல்லூரி மாணவர், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மில் பெண் தொழிலாளி, திருவண்ணாமலையைச் சேர்ந்த தமோதரன் ஆகியோர் பரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புரோட்டாவுக்கு பெயர் பெற்ற விருதுநகரில் கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் சென்னை வியாசர்பாடியில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து புரோட்டா சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கார்த்திக் என்ற இளைஞருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து கார்த்திக் உயிரிழந்தார். அதுவரை சிரித்து பேசி சாப்பிட்டுக்கொண்டிருந்த கார்த்திக் உயிரிழந்ததை பார்த்து குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர். எமனாக மாறி கார்த்திக் உயிரை காவு வாங்கியுள்ளது புரோட்டா. கார்த்திக் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Despite many doctors saying about the disadvantages of Parotta food, the sale of prota is increasing in shops all over Tamil Nadu. In Chennai, a young man fainted and died after eating parotta food.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X