Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை!" வெறும் சில மாதங்களில்.. சாதித்து காட்டிய ராஜீவ் காந்தி மருத்துவமனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் யாருமே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா, உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் கடந்த ஆண்டு வரை 2 அலைகளை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து இந்தாண்டு தொடக்கத்தில் ஓமிக்ரான் கொரோனா காரணமாகத் தமிழகத்தில் 3ஆவது கொரோனா அலை ஏற்பட்டது.

 கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைத் தலைநகர் சென்னையில் தான் 3ஆம் அலை முதலில் மோசமுடைய தொடங்கியது. கடந்த டிச. 24இல் 146ஆக இருந்த தினசரி கேஸ்கள் அதன் பின்னர் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. ஜனவரி 4ஆம் தேதி ஆயிரத்தைக் கடந்த தினசரி கேஸ்கள் வெறும் 4 நாட்களில் அதாவது ஜன.8இல் 5 ஆயிரத்தைக் கடந்தது. அதேபோல கொரோனா விகிதமும் கிட்தட்ட 30% நெருங்கியது. இதனால் சென்னைவாசிகள் பெரும் அச்சம் கொண்டனர்.

 சென்னை

சென்னை

அதிகபட்சமாகக் கடந்த ஜன. 16ஆம் தேதி சென்னையில் 8987 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அன்றைய தினம் மாவட்டத்தில் பாசிட்டிவ் விகிதமும் 30% தொட்டது. கொரோனா பரவல் தொடங்கியது முதல் தலைநகர் சென்னையில் பதிவான உச்சப்பச்ச கொரோனா கேஸ்கள் இதுவாகும். அதன் பின்னரே தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது.

 கட்டுக்குள் கொரோனா

கட்டுக்குள் கொரோனா


தற்போது தமிழகத்தில் கடந்த 20 நாட்களாகவே 100க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் தினசரி பாதிப்பு 10க்கும் கீழாகக் குறைந்துள்ளது. அவர்களிலும் பெரும்பாலானோருக்கு லேசான கொரோனா பாதிப்பே ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் இப்போது முழுமையாகக் கட்டுக்குள் இருக்கும் நிலையில், இப்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 வேக்சின் முக்கியம்

வேக்சின் முக்கியம்

கொரோனா கட்டுக்குள் உள்ள நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து கொரோனா நோயாளிகளும் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அம்மருத்துவமனையில் டீன் தேரணி ராஜன் கூறுகையில், "கொரோனா வைரசை கட்டுப்படுத்த வேக்சின் முக்கியம். தமிழகத்தில் இதுவரை 1 கோடி பேர் 2ஆவது டோஸ் வேக்சின் எடுக்கவில்லை. மேலும், 50 லட்சம் பேர் ஒரு டோஸ் வேக்சின் கூட எடுத்துக் கொள்ளவில்லை.

 மெகா தடுப்பூசி முகாம்

மெகா தடுப்பூசி முகாம்

அவர்கள் அனைவரும் தானாக முன்வந்து வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும். வேக்சின் செலுத்தும் பணிகளை வேகமாக மேற்கொள்ள மெகா தடுப்பூசி முகாம் பெரியளவில் உதவியன. விடுமுறை நாட்களில் வேக்சின் பணிகள் நடத்தப்பட்டதால் அதிகளவில் பொதுமக்கள் வேக்சின் போட்டுக் கொண்டனர். அதேபோல தமிழக அரசும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

 ஆக்சிஜன் தேவை

ஆக்சிஜன் தேவை

2050 படுக்கைகள் உடன் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிந்த ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இப்போது ஒரு கொரோனா நோயாளிகள் கூட இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 43 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது. தமிழக அரசும் சிறப்பாகச் செயல்பட்டது. குறிப்பாக ஆக்சிஜன் தேவை உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட செரூவூட்டிகள் வந்தது. குறைந்த அளவில் ஆக்சிஜன் தேவைப்பட்டவர்களுக்கு அதை அளித்தோம்.அதன் பின்னரே ஆக்சிஜன் தேவை குறைந்தது.

போர்

போர்

கொரோனா பாதிப்பில் முதியவர்கள் பலரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர், ஆனால், முதியவர்கள் தப்பினர். ஆனால், உடல் பருமன் காரணமாக இளைஞர்கள் இடையே உயிரிழப்பு ஏற்பட்டது. அது தடுக்க முடியவில்லை. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அனைவரும் மனநல சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அது முக்கியம்! மிகப் பெரிய போரை வென்று வெளியே வந்தது போல இருக்கிறது" என்றார்.

 நடவடிக்கை

நடவடிக்கை

கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த சமயத்தில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 205 ஆம்புலன்ஸ்கள் வெளியே இருக்கும் சூழல் ஏற்பட்டது. படுக்கை தட்டுப்பாடு இருந்ததால், அவர்களுக்கு ஆம்புலன்ஸ்களிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காகச் சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து Zero Delay ward ஏற்படுத்தப்பட்ட துரிதமாகச் சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 ஓய்வறியாத சுகாதாரத் துறை

ஓய்வறியாத சுகாதாரத் துறை

இப்படி சுகாதாரத் துறையினர் எடுத்த தொடர்ச்சியான நடவடிக்கை காரணமாக வைரஸ் பாதிப்பு இப்போது முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ளது. உறவுகள் கூட கிட்ட நெருங்கத் தயங்கிய காலத்திலும் மக்களைக் காக்க எவ்வித தயக்கமும் இன்றி தங்கள் பணிகளைச் சுகாதார பணியாளர்கள் சோர்வின்றி செய்தார்கள். இவர்களின் அளப்பறியப் பணி காரணமாகவே நோயாளிகளால் நிரம்பி வழிந்த ராஜீவ் காந்தி மருத்துவமனை, சில மாதங்களில் ஒரு நோயாளி கூட இல்லாத நிலையை எட்டியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+