சோகம்.. ஆசையாய் விளையாடிய கோவை சிறுவர்கள்! அருகிலேயே இருந்த “ஆபத்து” - விழுங்கிய குளம்.. மூவரும் பலி
கோவை: சூலூரில் குளத்தின் அருகில் நின்று விளையாடிக்கொண்டு இருந்த 3 சிறுவர்கள் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஏரிகள், குளங்கள், ஓடைகள், கண்மாய்கள் போன்ற பல நீர்நிலைகள் நிரம்பிய நிலையிலேயே உள்ளன. தொடர்ந்து மழைபொழிவும் இருப்பதால் நீர் நிலைகள் செழிப்போடு உள்ளன.
ஒருபக்கம் மகிழ்ச்சியான தகவலாக இது இருந்தாலும் மறுபக்கம் இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் மகிழ்ச்சியோடு குளித்து வருகின்றனர்.

தொடரும் விபத்துக்கள்
ஆனால் போதிய நீச்சல் பயிற்சி இன்றி இளைஞர்கள், சிறுவர்கள் நீர்நிலைகளில் குளிப்பது, தடுப்புகள் இல்லாத நீர்நிலைகள் ஓரமாக சிறுவர்கள் விளையாடுவது, நீர்நிலைகளில் நின்றுகொண்டு செல்பி எடுப்பது போன்ற காரணங்களால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

3 சிறுவர்கள்
இதே போன்ற சோக நிகழ்வுகள்தான் தற்போது கோவையில் நடந்து இருக்கிறது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள மதியழகன் நகரைச் சேர்ந்த சிறுவர்கள் அகிலன் (10), சஸ்வந்த் (8), சஞ்சீவ் (7) ஆகியோர் சூலூர் குளக்கரையில் விளையாடுவது வழக்கம். அதேபோல் இன்றும் குளக்கரையில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

குளத்தில் மூழ்கி பலி
அப்போது மூவரும் குளத்தில் தவறி விழுந்தனர். இதனை அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நேரில் பார்த்துள்ளார். உடனடியாக குளத்திற்கு ஓடி செல்வதற்கு முன்பாகவே மூவரும் குளத்தில் மூழ்கி உள்ளனர். இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மூவரது உடலையும் மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பிரேத பரிசோதனை
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மூன்று சிறுவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications