கோவையில் பட்டப் பகலில்.. பட்டா கத்தியுடன் ரவுடி அட்டகாசம்.. வீட்டு கேட்டை உடைக்கும் பரபர வீடியோ
கோவை: கோவையில் பட்டப் பகலில் ரவுடி ஒருவர் பட்டா கத்தியுடன் ஒரு வீட்டுக்குச் சென்று அங்குள்ளவர்களை தாக்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கோவை மசகாளிபாளையம் முல்லை நகரில் வசித்துவரும் மணிகண்டன் என்பவர் பிரபல ரவுடி என்று கூறப்படுகிறது.
இவர் இந்த பகுதியில் அவ்வப்போது குடிபோதையில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தகராறு செய்து அங்கிருக்கும் வாகனங்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மக்கள் ஆதங்கம்
இவரது நடவடிக்கைகளால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வெறுத்துப் போயுள்ளனர். காவல்துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காததால் பொறுத்து பொறுத்து பொங்கிய அந்த ஏரியா மக்கள், ரவுடியை தட்டிக் கேட்க முடிவு செய்துள்ளனர்.

பட்டா கத்தியுடன் கலாட்டா
இன்று காலை ரவுடியின் வீட்டுக்கு எதிரே உள்ளவர்கள் அவரது அராஜகத்தை எதிர்த்து கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. அவரது நடவடிக்கைகளை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இதனால் மணிகண்டன் கடுமையாக கோபமடைந்துள்ளார்.
பட்டாகத்தியை தூக்கிக் கொண்டு, போனில் வீடியோ எடுத்தவர் வீட்டுக்கே போய்விட்டார். கற்களைக் கொண்டு கேட்டை உடைத்தும், கத்தியால் ஓங்கி வெட்டிவிடுவதாக வீட்டுக்காரரை மிரட்டவும் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கேட்டை தாண்டி வீட்டுக்குள் குதிக்க முற்பட்டார் மணிகண்டன். இதனால் பெண்கள் பீதியடைந்தனர்.

வீடியோ பதிவு
இந்த காட்சிகளை அண்டை வீட்டுக்காரர்களில் சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ரவுடி கேட்டை தாண்ட முற்பட்டபோது.. உள்ளே வந்தால் நல்லா இருக்காது என அந்த வீட்டு பெண்மணி கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

காவல்துறை நடவடிக்கை
பட்டப்பகலில் பெண்கள் இருக்கும் வீடு என்று கூட பாராமல், பட்டா கத்தியோடு, ரவுடி மிரட்டல் விடுத்த சம்பவம் கோவை, மசகாளிபாளையம் பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர், இதுபோன்ற சமூக விரோதிகளை, இரும்புக் கரம் கொண்டு உடனடியாக ஒடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications