எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டாரே! கஷ்டப்பட்டு சிரிக்கிறார்! அண்ணாமலை உருக்கம்!
கோவை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எப்படி இருந்தவர், இப்படி ஆகிவிட்டாரே, திருமாவளவன் 5 அல்லது 6 தொகுதிகளுக்கெல்லாம் ஒப்புக் கொள்ள மாட்டார் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், எரிபொருள் தட்டுப்பாடு என திமுக கூட்டணிதான் பீதியை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் பெட்ரோலை வாங்க மக்கள் கேனுடன் சென்றுள்ளார்கள்.

இரு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் வழியே சிக்கலின்றி வந்துள்ளது, வெளியுறவுத் துறையின் வெற்றியை காட்டுகிறது. பல நாடுகளில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டும்தான் உயர்த்தப்படவில்லை.
யார் வீட்டிலும் சிலிண்டர் பிரச்சனை இல்லாத போது தலையில் சிலிண்டரை வைத்து காங்கிரஸ் நாடகம் ஆடுகிறது. விளாத்திக்குளம் பாலியல் வன்கொடுமை சம்பவம் காவல் துறையை நிர்வகிக்கும் ஸ்டாலினின் தோல்வியை காட்டுகிறது. புகார் கொடுத்த போதே காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால் பிரச்சனை நடந்திருக்காது. விளாத்திக்குளத்திற்கு முதல்வர் நேரில் செல்ல வேண்டும்.
சிறு குழந்தை முதல் மூதாட்டி வரை தமிழகத்தில் பாதுகாப்பு என்பதே இல்லாமல் இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கான பாதுகாப்பின்மை உள்ளிட்டவைகளை கண்டித்து வரும் 17ஆம் தேதி என்டிஏ கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்.
தமிழகத்தில் தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. யாரையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் இன்னும் இரண்டு அல்லது மூன்று முறை பிரதமர் மோடி வரவிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு அதிக சீட் கொடுத்துவிட்டு கம்யூனிஸ்ட்டிற்கு அதிக சீட் கொடுக்காததை ஏற்க மாட்டோம் என சண்முகம் தெரிவித்துள்ளார். வைகோவை பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்.
தொகுதி பங்கீட்டின் போது கஷ்டப்பட்டு சிரிக்கிறார். அது போல் கொமதேக 3 தொகுதியில் கடந்த முறை நின்றார்கள். திருமாவளவன் திமுக கொடுக்கும் 5, 6 சீட்களை ஏற்கவே மாட்டார். கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் எல்லாமே அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வெளியே போகிறார்களா, வேறு கூட்டணிக்கு செல்கிறார்களா என தெரியாது.
இந்த முறை 2 தான் கொடுத்திருக்கிறார்கள். திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதால் கூட்டணியில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். தேர்தல் நெருங்கும் போது எப்போதுமே ஒரு ஃபைனல் ட்விஸ்ட் தமிழக அரசியலில் இருக்கும். இந்த முறை என்ன டிவிஸ்ட் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
கரூர் விவகாரத்தில் சிபிஐ வழக்கு வேண்டும் என கேட்டது யார்? தமிழக வெற்றிக் கழகம்தான் கேட்டது, அவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக நாங்களும் ஆதரவு தெரிவித்தோம். ஜனநாயகன் படம் குறித்து விஜய்யே கருத்து சொல்லாத போது நான் என்ன சொல்ல முடியும்?
அந்த படத்தில் நடித்த நடிகர் விஜய்யே இதுவரை ஜனநாயகன் படம் வெளியாகாததற்கு பாஜகதான் காரணம் என எந்த இடத்திலும் சொல்லவில்லை. எனவே விஜய்யிடம் சிபிஐ விசாரணைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 இல் உதயசூரியன் சின்னத்திலும் ஒன்றில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது குறிப்பிடத்தக்கது.
-
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு.. மையக்குழு கூட்டத்துக்கு பின் உறுதி செய்த நயினார்! -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு












Click it and Unblock the Notifications