Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆள் கடத்தல் கும்பலுடன் திமுகவினருக்கு தொடர்பாம்.. உடனடியாக விசாரிக்க சொல்கிறார் அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

கோவை : கோவையில் காப்பகத்தில் ஆட்களை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்த சம்பவத்தில், தி.மு.கவினருக்கு உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த அட்டுக்கல் பகுதியில் காப்பகம் ஒன்றில் பலர் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வந்து விசாரித்ததில் அந்தக் காப்பகம் அனுமதி இன்றி செயல்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், இந்த மோசடிக் கும்பலுக்கும் தி.மு.கவுக்கும் உள்ள தொடர்பை, போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் உடல் உறுப்புகளை கடத்தி விற்கும் கும்பலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அன்ணாமலை அரசை வலியுறுத்தியுள்ளார்.

அட்டுக்கல் மலை அடிவாரம்

அட்டுக்கல் மலை அடிவாரம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த அட்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தடை செய்யப்பட்ட கிறிஸ்தவ விடுதியில் அடையாளம் தெரியாதவர்கள் வாகனங்களில் கொண்டு வந்து தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், சுற்று வட்டாரப் பகுதியில் சிலர் காணாமல் போனதாகவும் தகவல் பரவியது‌. அதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு பாஜகவினர் உள்ளிட்ட பொதுமக்கள் வந்து பார்த்தபோது அனைவரும் மொட்டை அடித்து 10 அறைகளில் 50-க்கும் மேற்பட்டவர்களை அடைத்து வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அனுமதி பெறாத விடுதி

அனுமதி பெறாத விடுதி

இதையடுத்து அவர்கள் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் வடவள்ளியை சேர்ந்த ஜிபின், சைமன் செந்தில்குமார் ஆகிய இருவரும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து மறுவாழ்வு அளிக்க தங்க வைத்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அந்த மையத்திற்கு அனுமதி ஏதும் பெறாமல் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ஜிபின், சைமன் செந்தில்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அண்ணாமலை

அண்ணாமலை

இந்நிலையில், இந்த விவகாரத்திற்கும் தி.மு.கவுக்கும் உள்ள தொடர்பை, போலீசார் விசாரிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசின் கவனக்குறைவால், தமிழகத்தில் தினமும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் தற்கொலைகள், லாக்-அப் மரணங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது, தி.மு.க அரசின் மெத்தனப்போக்கையும் திறனற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

திமுக கவுன்சிலர்

திமுக கவுன்சிலர்

கோவை, தொண்டாமுத்துார் அடுத்த அட்டுக்கல் கிராமத்தில், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அரசு அதிகாரிகளால், நான்கு ஆண்டுகளுக்கு முன் சீல் வைக்கப்பட்டது. தி.முக ஆட்சிக்கு வந்ததும், தொண்டாமுத்துார் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் ரவி உதவியுடன், அந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டு, சமீபத்தில் அவரது தலைமையில் திறப்பு விழா நடந்துள்ளது.

சட்டவிரோத காப்பகம்

சட்டவிரோத காப்பகம்

கருணை பயணம் என்ற காப்பகத்தில் ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவதாகவும், ஜேக்கப், சைமன், ஜெபின், செந்தில்குமார் ஆகிய நான்கு பேர், இதை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
இந்த காப்பகத்தில், 200க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் இந்த அமைப்பினர், சாலையில் நடந்து சென்ற முதியோர்களை வழிமறித்து, வற்புறுத்தி காப்பக வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

துன்புறுத்தல்

துன்புறுத்தல்

இதைக் கண்ட பா.ஜ.க தொண்டர்கள், மாவட்ட தலைவர் உத்தம ராமசாமிக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறை உதவியோடு, அந்த வாகனத்தை இடைமறித்து, அழைத்துச் செல்லப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் யாரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும், வற்புறுத்தி அழைத்துச் சென்று, அவர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை தீயிட்டு எரித்ததும் தெரியவந்தது. கேள்வி கேட்டவர்களை துன்புறுத்தியுள்ளனர்.

 திமுகவுக்கு தொடர்பு

திமுகவுக்கு தொடர்பு

பா.ஜ.க தலையிடுவதை அறிந்ததும், 92 பேரை வாகனத்தில் கொண்டு சென்று, கோவையின் பல பகுதிகளில் விடுவித்துள்ளனர். இந்த மோசடிக் கும்பலுக்கும் தி.மு.கவுக்கும் உள்ள தொடர்பை, போலீசார் விசாரிக்க வேண்டும். உடல் உறுப்புகளை கடத்தி விற்கும் கும்பலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்க வேண்டும். அனுமதியின்றி செயல்படும் இதுபோன்ற காப்பகங்களை ஒழுங்குபடுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+