கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வானதி சொன்ன ஐடியா.. டாஸ்மாக் பக்கத்திலேயே தடுப்பூசி முகாம்கள்.. தமிழக அரசுக்கு வைத்த புது கோரிக்கை

பாஜகவின் வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

கோவை: டாஸ்மாக் கடைகளுக்கு பக்கத்திலேயே தடுப்பூசி முகாம்களை நடத்தி, அங்கு வரும் ஆண்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் நேற்று கொண்டாடப்பட்டது.. கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நிலையில் அவரின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், 20 வருட அரசியல் பயணத்தை பாராட்டும் வகையில் அக்டோபர் 7ம் தேதிவரை பிறந்தநாள் கொண்டாட்டம் 20 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மோடியின் பிறந்தநாளை "சேவை மற்றும் சமர்ப்பண தினமாக" கொண்டாடி வருகின்றனர் பாஜக தொண்டர்கள்.

 பள்ளி மாணவர்கள் வாட்ஸ் அப் குழுவிற்கு ஆபாசப்படங்களை அனுப்பிய மாணவனின் சித்தப்பா கைது பள்ளி மாணவர்கள் வாட்ஸ் அப் குழுவிற்கு ஆபாசப்படங்களை அனுப்பிய மாணவனின் சித்தப்பா கைது

 கொண்டாட்டம்

கொண்டாட்டம்

அதன்படி, கோவை மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது.. கோவை காந்திபுரத்தில் நேற்றைய தினம் 12 ஆயிரம் இளம்பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் துவக்க விழா தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில் நடந்தது.. விழாவில் வானதி சீனிவாசன் பேசியதாவது:

 மகளிரணி

மகளிரணி

"பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அக்டோபர் 7ம் தேதி வரை மகளிரணி சார்பில் நாடு முழுவதும் மகளிர் நலத்தை முன்னிட்டு, பெண்களுக்காக ஊட்டச்சத்து உணவு வழங்குதல், பரிசோதனை முகாம், ரத்த சோகையை போக்கும் இரும்புச்சத்து மாத்திரை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது" என்று அறிவித்திருந்தார்.

 முகாம்கள்

முகாம்கள்

இந்நிலையில், கோவை மக்கள் சேவை மையம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் புலியகுளம் பகுதியில் இன்று நடத்தப்பட்டது... இந்த முகாமை வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்... இதில், புலியகுளம் மற்றும் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர். மேலும், அறுவை சிகிச்சைக்கான தேவை இருப்பவர்களுக்கு பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

 இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

இந்த முகாமினை தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் பேசும்போது, "பெண்கள் பொதுவாக தங்களது உடல் நலம் குறித்து மருத்துவ ஆலோசனைகள் பெறுவதில் தயக்கம் காட்டக் கூடியவர்கள்.. அதனால்தான், அவர்களது குடியிருப்புகளுக்கு அருகிலேயே இப்படி இலவச மருத்துவ முகாம் நடத்தி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம்.. இப்படி நாங்கள் முகாம்களை நடத்தி வருவதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Recommended Video

    Tasmac-ஐ நம்பியிருக்க தேவையில்லை.. Tamilnadu-ன் எதிர்காலமே இனி இதுதான்.. முதல்வர் அமைத்த கமிட்டி
     டாஸ்மாக்

    டாஸ்மாக்

    அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.. ஆனால், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பெண்களை விட ஆண்கள் தயக்கம் காட்டுகின்றனர்.. அதிலும் மது பழக்கம் உடைய ஆண்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.. எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு அருகே தடுப்பூசி முகாம்களை நடத்தி அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

    English summary
    BJP Vanathi Srinivasan says, Covid19 Vaccine campaign should made near Tasmac shops
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X