"அந்த" ஒரு வார்த்தை.. ஓபனா இப்படியெல்லாம் கூடவா நடக்கும்?.. மிரண்டு போன கோவை போலீஸார்..!
கடத்தல் மண் குறித்த வார்த்தையால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது
கோவை: ஒரே ஒரு போர்டு வைத்ததால், இந்த விவகாரம் போலீஸ் வரை சென்றுவிட்டது.. பொதுமக்களும் இதனால் எக்கச்சக்கமாக குழம்பி போயுள்ளனர்.
கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் "வாசு மணல் சப்ளையர்ஸ்" என்ற பெயரில் ஒரு கடை இயங்கிவருகிறது... கட்டிடங்களுக்கு தேவையான மணல், செங்கல், எம்-சாண்ட், ஜல்லி, சிமெண்ட் போன்றவற்றை இங்கு விற்பனை செய்துவருகின்றனர்...
அந்த கடைக்கு ஒரு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.. அந்த பிளக்ஸ் போர்டில் "கடத்தல் மண்" எடுத்து தரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடத்தல் மண்
இதுதான் தற்போது பேசுபொருளாகி விட்டது.. இந்த போர்டும் சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது.. இதை பார்த்த பலரும், இப்படியா ஓபனாக கடத்தல் மண் எடுத்து தரப்படும் என்று சொல்வது? இதையெல்லாம் அதிகாரிகள் பார்க்க மாட்டார்களா? போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.. ஆனால், இதை கண்ட போலீசாருக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கடத்தல் மண் வார்த்தை
காரணம், தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வட்டார மொழிகள் இருப்பது போலவே, கோவைக்கும் ஒரு வட்டார மொழி உள்ளது.. அந்த வகையில், பழைய கட்டிடங்களை இடித்து எடுக்கப்பட்ட மண்ணை "கடத்தல் மண்" என்று அழைப்பது வழக்கம்... வீடுகளுக்கு முன்பாக குழிகளை நிரப்பவும், சாலைகளில் கொட்டி அவைகளை சமன் செய்யவும், பாழடைந்த கிணறுகளை நிரப்பவும் இந்த கட்டிடம் இடித்த கழிவுமண்ணை தான் பெரும்பாலும் பயன்படுத்துவது வழக்கம்.

ஆற்றுமணல்
இதற்கான தேவைகளும் பொதுமக்களிடம் நிறையவே உள்ளதால், இப்படி போர்டில் "கடத்தல் மண்" எடுத்து தரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.. ஆனால், இதை பார்த்த பொதுமக்களோ, அனுமதி இன்றி எடுக்கப்படும் மண்ணிற்கும் "கடத்தல் மண்" என்று சொல்வதால், அந்த மண்தான் இது என்று தவறுதலாக நினைத்து கொண்டுவிட்டனர்.. இறுதியில் இதுசம்பந்தமான காரசார விமர்சனங்களும், மக்களின் கோப கேள்விகளும் துடியலூர் போலீஸ்வரை சென்றுவிட்டது..

மணல் சப்ளையர்
இதற்கு பிறகு, இடையர்பாளையம் பகுதியில் உள்ள மணல் சப்ளையர்களிடம், "கடத்தல் மண்" என்ற வட்டார மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகத்தை நீக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்... மேலும், ஒரு வட்டார மொழி இன்னொரு பகுதியில் வேறு மாதிரியான அர்த்தங்களை தந்துவிடுவதால், எல்லாருக்கும் புரியும் வகையில் பிளக்ஸ் பேனரில் குறிப்பிடும்படி மணல் சப்ளையர் நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

கடத்தல் மண்
இதையடுத்து, அந்த பகுதியில் இருந்த அனைத்து பிளக்ஸ் போர்டுகளும் உடனடியாக மாற்றப்பட்டன.. "கடத்தல் மண்" என்ற வட்டார மொழியினை நீக்கி விட்டு கட்டிடம் இடித்த மண் எடுத்து தரப்படும் என்று கொட்டை எழுத்தில் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.. மேலும் சிலரோ, "கடத்தல் மண்" என்ற வாசகத்தை மட்டும் பெயிண்ட் அடித்து மறைத்தும் வருகின்றனர். ஒரே ஒரு வார்த்தையால், சோஷியல் மீடியாவில் பரபரப்புகள் பெருகி பிறகு அடங்கிவிட்டது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications