ஒன்றியச் செயலாளரும் அவரே.. மாவட்டச் செயலாளரும் அவரே.. யார் சாய்ஸ் இது? கோவை மாவட்ட திமுக ருசிகரம்!
கோவை: கோவை மாவட்டத்தில் ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆகிய இரண்டு பதவியிடங்களுக்கும் ஒரே நபரை அறிவித்துள்ளது திமுக தலைமை.
வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் ஒன்றியச் செயலாளராக இருப்பவரிடமே கூடுதல் பொறுப்பாக மாவட்டச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள தொண்டாமுத்தூர் ரவி, அமைச்சர் செந்தில்பாலாஜியின் சாய்ஸ் என்பது கவனிக்கத்தக்கது.

திமுக மாவட்டச் செயலாளர்
அமைச்சர் பதவிக்கு இணையான புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை திமுக தலைமை நேற்றிரவு வெளியிட்டுள்ளது. இதில் மாற்றம் செய்யப்பட்ட 7 மாவட்டச் செயலாளர்களில் கோவை மாவட்டத்தில் இருவர். கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக தளபதி முருகேசன் என்பவரை கொண்டு வந்துள்ளார் அம்மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி. இதேபோல் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக தொண்டாமுத்தூர் ரவி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒருவருக்கு 2 பதவிகள்
இந்த ரவி என்பவர் தற்போது தொண்டாமுத்தூர் ஒன்றியச் செயலாளராகவும் உள்ளார். ஆனாலும் அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவியும் தரப்பட்டுள்ளது. ஒன்றியம், மாவட்டம் என கட்சியில் உள்ள இரண்டு முக்கியப் பதவிகளை ஒரே நபருக்கு வழங்கியிருப்பது தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பை சுட்டிக்காட்டி அது தொடர்பான விவாதங்கள் கோவை மாவட்ட திமுகவினர் மத்தியில் பேசு பொருளாக உள்ளது.

தொண்டாமுத்தூர் தொகுதி
தொண்டாமுத்தூர் தொகுதியை பொறுத்தவரை அதிமுகவிடம் திமுக தொடர்ந்து பறிகொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த தொகுதியை உள்ளடக்கிய பகுதிக்கு ஒன்றியச் செயலாளராக இருக்கும் ஒருவரிடம் ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறது திமுக தலைமை. இதனிடையே இந்த நியமனத்தை அதிமுகவினர் தங்களுக்கு சாதகமானதாக பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு மாவட்டம்
இதனிடையே கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள தளபதி முருகேசனுக்கு எதிராக கட்சியினர் மத்தியில் பெரியளவில் எதிர்ப்புகள் இல்லை. ஓரளவு ஆக்டிவாக பணியாற்றக் கூடியவர் என்பதால் அவரது நியமனம் எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை. இவரும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications