”நோட்டா கிட்ட வச்சுக்கோ..” பாஜகவை சீண்டும் திமுக.. கரூரில் ஒட்டிய போஸ்டருக்கு கோவையில் பதிலடி!
கோவை: கரூரில் செந்தில் பாலாஜியை விமர்சித்து பாஜக தரப்பில் ஒட்டப்பட்ட போஸ்டருக்கு, கோவையில் திமுக சார்பாக பாஜகவை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெரிய வெற்றியை பெற முடியாமல் திமுக திணறியது. இதனைத்தொடர்ந்து கொங்கு மண்டல பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட பின்னர், அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் அபார வெற்றியை திமுக பதிவு செய்தது.
எஸ்பி வேலுமணியின் கோட்டை என்று அழைக்கப்படும் கோவையிலேயே திமுக அபார வெற்றியை பதிவு செய்தது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாமல் 50 ஆயிரம் பேரை ஒரே கூட்டத்தில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைத்து இருந்தார். செந்தில் பாலாஜி செயல்பாடுகளை கணிக்க முடியாமல் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் திணறி வருகிறது.

செந்தில் பாலாஜி மீது புகார்
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பாஜக தரப்பில் நிலக்கரி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதோடு, பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய ஆளுநரிடம் பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

செந்தில் பாலாஜி பற்றி போஸ்டர்
இதனைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கேலி செய்யும் விதமாக பாஜகவினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். ரூ. 5,000 கோடிக்கு அதிபர் செந்தில் பாலாஜி என்று கூறி போஸ்டர்களை பாஜக ஒட்டி இருந்தது. கரூர் முழுக்க பல இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சாலை சந்திப்புகள், தடுப்புகள், முக்கிய பாலங்களுக்கு கீழ் எல்லாம் இது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

திமுக பதிலடி
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டத்திலேயே பாஜக போஸ்டரை ஒட்டியது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பாஜகவுக்கு பதிலடி கொடுக்க திமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வந்தன. இதனிடையே கரூரில் நடைபெற்ற திராவிட பயிற்சி பாசறை கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி, நோட்டாவுடன் போட்டி போடக்கூடிய கட்சியினர் கூறும் தவறான கருத்துகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.

பாஜக மீது விமர்சனம்
இந்த நிலையில் கோவை கிழக்கு மாவட்ட திமுகவினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பாஜகவை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களில், "நோட்டா கிட்ட வச்சுக்கோ.... எங்க ஏட்டா கிட்ட வேண்டாம்" என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை ரயில் நிலையம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications