கோவையில் சித்தப்பாவுடன் உல்லாசம்.. பார்த்துவிட்ட கணவன்.. போலீஸையே திடுக்கிட வைத்த இந்திராணி
கோவை: திருமணத்தை மீறிய காதல் இன்றைக்கு எல்லை மீறி போகிறது. ஒருவரை பிடித்துவிட்டால், கணவனை விட்டு பிரிந்து செல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என்றால், ஊருக்காவும், குழந்தைக்காவும் கணவனை பிரியாத மனைவி, கள்ளக்காதலையும் கைவிட தயாராக இருப்பது இல்லை.. கோவை அருகே சித்தப்பாவுடனான கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை இளம் பெண் என்ன செய்தார் தெரியுமா? அது பற்றி பார்ப்போம்.
மதுரையை சேர்ந்தவர் தேவா என்ற ரித்தீஷ்க்கு 27 வயது ஆகிறது. இவர் கூலித்தொழிலாளி ஆகிறார். குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி இந்திராணிக்கு 26 வயது ஆகிறது இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கடந்த 26-ந்தேதி தேவா திடீரென காணாமல் போனார். எங்கே போனார்.. அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து இந்திராணி சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகறிதுது. இதனால் சந்தேகம் அடைந்த தேவாவின் தாயார் சுசீலா, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவாவை தேடி வந்தனர்.
இந்தநிலையில் தேவாவின் மனைவி இந்திராணி நேற்று கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு வந்து கணவரை நான் தான், உறவினா் உள்ளிட்டோருடன் சேர்ந்து கொன்றதாக தெரிவித்து சரணடைந்திருக்கிறார். இதையடுத்து இந்திராணியை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. இந்திராணிக்கும், அவரது சித்தப்பாவான கரூரில் ஓட்டலில் வேலை பார்த்து வந்த வினோத்குமார்(41) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளதாம். வீட்டில் தேவா இல்லாத நேரம்பார்த்து அடிக்கடி வினோத்குமார் வந்து இந்திராணியை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தார்களாம். இதை அறிந்த தேவா, 2 பேரையும் கண்டித்து வந்தாராம்.
இந்தநிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி கணவர் தேவாவை இந்திராணி மற்றும் வினோத்குமார் ஆகியோர் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்கள். அதன்படி கடந்த 28-ந் தேதி இரவு வீட்டில் தேவா இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திராணி, வினோத்குமாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார்.
அதன்படி அவரும், சிலருடன் வீட்டிற்கு வந்தார். இந்திராணி, வினோத்குமார் மற்றும் அவருடன் வந்தவர்கள் தேவாவிடம் தகராறு செய்தனர். பின்னர் கத்தியால் தேவாவை கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டார்களாம். பின்னர் நள்ளிரவில் கரூரில் இருந்து தனியார் ஆம்புலன்சை வரவழைத்து அதில் தேவா உடலை கரூர் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்திற்கு எடுத்து சென்று ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ததாக நம்பவைக்கும் வகையில் உடலை போட்டுவிட்டு சென்றனர். இதையடுத்து இந்திராணி மதுரையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள்.
மறுநாள் காலை ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் தேவாவின் உடலை கைப்பற்றி ரெயில் மோதி இறந்திருக்கலாம் என கருதி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தேவாவை காணவில்லை என்ற புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் தாமரைக்குளம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வந்து சென்றதை கண்டறிந்தனர். ஆம்புலன்ஸ் குறித்து அந்த பகுதியில் விசாரணை செய்வதை கேள்விபட்ட இந்திராணி, கொலையை கண்டுபிடித்து போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று பயந்தள்ளார். அதற்கு முன்பு நாமே சரணடைந்து விடலாம் என நினைத்து இந்திராணி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான இந்திராணியை, கொலை நடந்த தாமரைக்குளத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்திராணி, கணவரை கொன்றது குறித்து நடித்து காண்பித்தார். தலைமறைவான வினோத்குமார் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
கோவையில் தொடங்கிய திமுக ஆட்டம்.. ஃபயர் மோடில் செந்தில் பாலாஜி.. பரபரக்கும் களம் -
கோவையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் எடுத்த முடிவு.. மாவட்ட கலெக்டருக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் -
இந்தியா முழுக்க பேசுபொருளான கோவை பஸ்.. கர்நாடகாவில் உண்மையில் என்ன நடந்தது.. போலீசார் வார்னிங் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications