கோவையில் மழையால் சாலையில் வெள்ளம்.. சட்டென களத்தில் இறங்கிய போலீஸ்.. கால்வாயை சுத்தம் செய்து அசத்தல்!
கோவை: கோவையில் இடைவிடாது பெய்த கனமழையால், பிரதான சாலையில் மழை நீர் தேங்கியது. இதையடுத்து அங்குள்ள கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்து மழைநீர் வடிந்தோட உதவிய போலீஸ்காரருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டி வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி உள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கோவையில் கனமழை
நீலகிரி, பெரம்பலூர், தேனி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இதில் இன்று காலை கோவை மாவட்டத்தில் கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் ஒருசில முக்கிய சாலைகளின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

வாகன ஓட்டிகள் சிரமம்
கழிவுநீர் கால்வாய்களும் அகற்றப்படாத குப்பைகளின் காரணமாக அடைத்துக்கொண்டது. இதனால் தண்ணீர் வெளியேற முடியாமல் சாலைகள் குளம்போல் காட்சியளித்தன. மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், கார்களில் சென்ற வாகன ஓட்டிகளும் சிரமமடைந்தனர். வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழையும் தொடர்ந்து பெய்து வந்ததால் அந்த சாலையில் மேலும் தண்ணீர் பெருகியது. இந்த நிலையில், மழைநீர் வெள்ளம்போல் தேங்கியிருப்பதை பார்த்த போலீஸ்காரர் ஒருவர் ஏன் தண்ணீர் தேங்குகிறது என்பதை கவனித்து, வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான பணியில் ஈடுபட்டார்.

எதற்கும் தயங்காமல்
உடனடியாக அந்த போலீஸ்கார சாலையோரம் இருந்த கழிவுநீர் கால்வாயின் மேற்புறம் இருந்த குப்பைகளை அகற்றினார். எதற்கும் தயங்காமல் அவர் அந்த குப்பைகளை நீக்கி தண்னீர் வடிந்தோட முயற்சி மேற்கொண்டார். அந்த போலீஸ்காரர் குப்பைகளை அகற்றியதால் கழிவுநீர் கால்வாய் வழியாக சாலையில் தேங்கியிருந்த மழைநீர் வேகமாக வெளியேறியது. இதனால் சிறிது நேரத்தில் அந்த சாலையில் வெள்ளம் போல் தேங்கியிருந்த மழை நீர் சிறிது நேரத்தில் வடிந்தோடியது. தொடர்ந்து அந்த சாலையில் வாகன போக்குவரத்து சீராகி, வாகன ஓட்டிகள் சிரமமின்றி வாகனங்களை ஓட்டி சென்றனர். இதற்காக பலர் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து சென்றனர்.

போலீஸ்காரருக்கு பாராட்டு
குறிப்பிட்ட நேரத்தில் கச்சிதமாக செயல்பட்ட போலீஸ்காரரின் இந்த செயலை அங்கிருந்த யாரோ வீடியோவாக படம்பிடித்துள்ளனர். தற்போது ஐபிஎஸ் அதிகாரியான ஸ்டாலின் என்பவர் இந்த வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட சில மணி நேரங்களில் பலர் வீடியோவுக்கு லைக் போட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் போலீஸ்காரருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஒருவர் போலீஸ்காரின் செயல் மிகச் சிறப்பு என்றும், இன்னொருவர், 'காவல் துறையினரின் வேலை இதுவல்ல என்றாலும், காவல் துறையினர் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் செயல். வாழ்த்துகள்' என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றர்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications