ஜெயலலிதா மரணம்.. ஆறுமுகசாமி அறிக்கை பற்றி ஒரேபோடாக போட்ட அன்புமணி ராமதாஸ்
கோவை: ‛‛ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகச்சாமி ஆணையத்தின் அறிக்கை புரோபஷனலாக இல்லை. டெக்னிக்கல் விஷயங்கள் இல்லை. இதை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம்'' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் 2016ல் மரணமடைந்தார்.
இதேபோல் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.

2 ஆணையங்கள் விசாரணை
இந்த 2 சம்பவங்களும் பெரும் பிரச்சனையாக மாறியது. ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தீவிர விசாரணை நடத்தி வந்தது. அதேபோல் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தொடர்பான தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது பற்றி விசாரணை நடத்தவும் ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

அறிக்கைகள் தாக்கல்
இந்த 2 விசாரணை ஆணையங்களும் தீவிர விசாரணை நடத்தி வந்தன. விசாரணை முடிவடைந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையை ஆறுமுகச்சாமியும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை அருணா ஜெகதீசனும் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர். இந்த 2 அறிக்கைகளும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த 2 அறிக்கைகள் பற்றி பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அன்புமணி ராமதாஸ் பேட்டி
அந்த வகையில் கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகச்சாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார்.

அரசியல் பண்ணலாம்
அப்போது,‛‛இந்த விஷயத்தில் நான் எனது தனிப்பட்ட கருத்தை சொல்கிறேன். ஆறுமுகச்சாமி ஆணைய அறிக்கை பார்த்தால் புரோபஷனலாக இல்லை. இதனை சட்டத்தின் முன்பு எடுத்து சென்றால் ஒன்றுமே ஆகாது. இதை வைத்து அரசியல் பண்ணலாம். அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றுமே இல்லை. ஏனென்றால் இன்னும் டெக்னிக்கல்லாக நிறைய விஷயங்கள் அதில் சொல்லப்படவில்லை. இதனை வைத்து அரசியல் செய்யலாம். சட்டமன்றத்தில் எடுப்படுமா? என்பது கேள்விக்குறிதான்'' என்றார்.

ஏற்றுக்கொள்ள வேண்டும்
மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அன்புமணி ராமதாஸ், ‛‛அருணா ஜெகதீசன் அறிக்கையில் 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். கூடுதல் இழப்பீடு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

காவல் துறைக்கு பாடமாக..
அதேநேரத்தில் அறிக்கையை முழுமையாக பார்த்து என்னென்ன சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். மேலும் இந்த அறிக்கையை ஒரு பாடமாக வைத்து காவல்துறை கற்று கொள்ள வேண்டும். ஏனென்றால் யாரும் மனிதரை கண்மூடித்தனமாக தாக்க முடியாது. துப்பாக்கியால் சுடுவது என்பது உச்சக்கட்டமானது. சாதாரணமாக அடிக்கவே கூடாது. இதனால் காவல் துறை இதனை படிப்பினையாக எடுத்து கொண்டு வருங்காலத்தில் அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்'' என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications