Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோட்டை.. ஒரு ஆளை கூட தூக்கமுடியாது.. எடப்பாடியின் ஒற்றை ஆதிக்கத்திற்கு உதவும் கொங்கு லாபி- என்ன கதை?

Subscribe to Oneindia Tamil

கோவை : எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றை அதிகார மையமாவதற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தொழிலதிபர்களின் ஏகபோக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையைக் கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் கட்சிக்குள் பெரும் புயல் வீசி வருகிறது.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை ஆவதற்கு கொங்கு மண்டலத்தின் பெரும் புள்ளிகள் இறங்கி வேலை செய்வதாக கூறப்படுகிறது.

 அதிமுகவில் வீசும் புயல்

அதிமுகவில் வீசும் புயல்

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவரை சமாதானப்படுத்த அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கிறது. இதற்கிடையே ஓ.பி.எஸ் ஆதரவாளர்களாக இருந்த பலரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக அணி மாறி வருகின்றனர்.

 நாளை பொதுக்குழு

நாளை பொதுக்குழு


அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையும் இன்று நடைபெற உள்ளது. இதனால், அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையைக் கைப்பற்றத் திட்டமிடுவதற்கு பின்னணியில் பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டாலும் முக்கியமான காரணம் ஒன்றும் உண்டு. அது கொங்கு லாபி. அதிகார மையத்தில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் இருக்க வேண்டும் என்பதற்காக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தொழிலதிபர்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வேலுமணி

வேலுமணி

ஜெயலலிதா இருந்தபோதே கொங்கு மண்டலம் அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வந்தாலும் கூட, கடந்த ஐந்து ஆண்டுகளில் கொங்கு மண்டலம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக மாறிவிட்டது என்றே கூறலாம். கொங்கு மண்டலத்தில் அதிமுக தனது பலத்தை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளதற்கு ஒரு முக்கியமான காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இவர் கடந்த ஆட்சியில் திமுகவுக்கு பெரும் குடைச்சலாக இருந்து வந்தார்.

சமூக ஆதரவு

சமூக ஆதரவு

கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி சார்ந்த சமூகத்தைச் சேர்ந்த மக்களே பெரும்பான்மை என்பதால், அதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. தனது பக்கம் வேலுமணி, தங்கமணி ஆகிய முக்கிய புள்ளிகளை வைத்து, மொத்த கொங்கு மண்டலத்தையும், அதிமுகவின் கோட்டையாகவே கட்டி எழுப்பிவிட்டார்.

 ஆட்சியைப் பறிகொடுத்தாலும்

ஆட்சியைப் பறிகொடுத்தாலும்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்தாலும் கூட கொங்கு மண்டலத்தில் முக்கால் வாசி தொகுதிகளைக் கைப்பற்றியதற்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் மணி அன் கோவின் திட்டங்களே காரணம். எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு ஒற்றை அதிகாரமிக்க தலைமையாக உருவெடுக்க வேண்டும் என்ற இப்போதைய காய்நகர்த்தல்களுக்கும் பின்னணியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களின் தூண்டுதல்கள் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஓபிஎஸ்ஸுக்கு தலைவலி

ஓபிஎஸ்ஸுக்கு தலைவலி

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், எடப்பாடியின் கோட்டையான கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் திமுகவால் ஓட்டையைப் போட முடியவில்லை. கடந்த ஆண்டு தேர்தல் முடிவுகள் வந்தபோதே, எடப்பாடி பழனிசாமியே பலமான தலைவர் என நிரூபிக்கப்பட்டுவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.

ஒற்றைத் தலைமை

ஒற்றைத் தலைமை

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியைப் பெறுவதற்கு கொங்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி, பல்வேறு தொழிலதிபர்களும் பல விதங்களில் உதவி செய்தனர். அதனால்தான் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த சசிகலாவால் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக்கப்பட்டார். இப்போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமை பதவியைக் கைப்பற்றவும் இந்த கொங்கு மண்டல கூட்டணி, களமிறங்கி வேலை செய்து வருகிறதாம்.

முழு ஆதரவு

முழு ஆதரவு

இதன் காரணமாகவே, கொங்கு மண்டலத்தில் முக்கிய நிர்வாகிகள் மட்டுமல்லாமல் கீழ்மட்ட நிர்வாகி ஒருவர் கூட எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டில் இல்லை என்கிறார்கள். ஓ.பி.எஸ்ஸின் சொந்த ஊரில் அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்களையே தனக்கு ஆதரவாகப் பேச வைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தால் அப்படி யாரையும் கொங்கு மண்டலத்தில் இருந்து தூக்க முடியாது என்கிறார்கள். காரணம், அதற்கு வேண்டிய எல்லா விதமான உதவிகளையும் கொங்கு மண்டலத்தின் முக்கிய புள்ளிகள் செய்கின்றனராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+