ஏற்கனவே 16 வயசில் ஒன்னு.. 19 வயசில் அடுத்த பொண்ணு! ஒரே நேரத்தில் இருவருடன் "எஸ்ஸான" டியூஷன் வாத்தி
கோவை: கோவையில் 16 வயது சிறுமி, கன்னியாகுமரியில் இளம்பெண் ஆகியோரை ஆந்திர மாநிலத்திற்கு கடத்தியதாக டியூசன் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்த இவர் ஒழுங்கீனச் செயல்களை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் 2019 ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து ஆத்தூரில் ஒரு நிறுவனத்தை வைத்து நடத்தி வந்தார். அங்கு பொதுமக்களின் பணத்தை பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் சரவணம்பட்டி பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கினார்.

பள்ளி நடன ஆசிரியர்
சரவணபட்டியில் உள்ள பள்ளியில் நடன ஆசிரியராகவும் இவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவரது பக்கத்து வீட்டில் இருந்த 16 வயது சிறுமிக்கு கணிதப்பாடம் டியூசன் எடுத்து வந்தார். இந்த நிலையில் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி ஆசிரியர் மணிமாறன் அவரை கடத்தியதாக கூறப்படுகிறது.

4 பிரிவுகளின் கீழ் வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக சரணவம்பட்டி காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். மணிமாறனுக்கு ஏற்கெனவே இரு முறை திருமணமாகியும் 16 வயது சிறுமியை பொள்ளாச்சி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கன்னியாகுமரி மாவட்டம்
16 வயது சிறுமியுடன் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதிக்கு சென்ற மணிமாறன், புதுமண தம்பதி என கூறிக் கொண்டு அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாக தெரிகிறது. அந்த வீட்டின் உரிமையாளரின் 19 வயது மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன் மணிமாறனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

ஆசை வார்த்தை
இதையடுத்து அந்த பெண்ணுக்கும் ஆசை வார்த்தை கூறி தன்னுடன் அழைத்துக் கொண்டு மணிமாறன் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து அந்த வீட்டு உரிமையாளர் கன்னியாகுமரி மாவட்ட போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில் 16 வயது சிறுமியையும் 19 வயது இளம்பெண்ணையும் வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்றது தெரியவந்தது.

ஜூலை மாதம்
2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கோவை போலீஸாரும் கன்னியாகுமரி போலீஸாரும் மணிமாறனை தேடி வருகிறார்கள். கன்னியாகுமரியை சேர்ந்த இளம்பெண் அண்மையில் அவரது தோழிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஆசிரியர் தன்னை பிடித்து வைத்திருப்பதை அந்த பெண்ணிடம் 19 வயது பெண் கூறியுள்ளார்.

மணிமாறன் கைது
இதையடுத்து அந்த பெண் 19 வயது பெண்ணின் பெற்றோருக்கும், காவல் துறைக்கும் தகவல் அளித்ததை அடுத்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருப்பிடத்தை கண்டறிந்த தனிப்படை போலீஸார் இன்று அதிகாலை மணிமாறனை கைது செய்து உடனிருந்த சிறுமியையும் இளம் பெண்மையும் மீட்டனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications