கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

6 மொழிகளை பேசுவேன்.. குடும்ப கஷ்டத்துக்கு ஸ்விக்கியில் வேலை.. போலீஸால் தாக்கப்பட்ட ஊழியர் கண்ணீர்

Google Oneindia Tamil News

கோவை: நான் 6 மொழிகளை பேசுவேன். ஐடி கம்பெனியில் வேலை பார்த்திருக்கேன், குடும்ப சூழலுக்காக ஸ்விக்கியில் வேலை பார்ப்பதாக போக்குவரத்து போலீஸால் தாக்கப்பட்ட ஊழியர் மோகன சுந்தரம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Swiggy ஊழியரை தாக்கிய Police.. போனில் நலம் விசாரித்த DGP Sylendra Babu #Viral

    கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனததில் வேலை செய்து வரும் இளைஞர் ஒருவர் அந்த வழியாக சென்ற தனியார் பளஅளி வாகனம் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை இடித்துவிடடு நிற்காமல் சென்றதாக தெரிகிறது.

    இதையடுத்து அந்த வேனை துரத்திச் சென்ற இளைஞர் தடுத்து நிறுத்தி கேட்ட போது அங்கு வந்த போக்குவரதது காவலர் சதீஷ் இதை கேட்க நீ யார் என கேட்டு கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக வீடியோ வைரலானது.

    ’ஸ்விக்கி’ ஊழியருக்கு பளார்! வீடியோவால் வசமாய் சிக்கிய காவலர் சதீஷ் சஸ்பெண்ட்! அதிரடியாக கைது! ’ஸ்விக்கி’ ஊழியருக்கு பளார்! வீடியோவால் வசமாய் சிக்கிய காவலர் சதீஷ் சஸ்பெண்ட்! அதிரடியாக கைது!

    இடைநீக்கம்

    இடைநீக்கம்

    இதையடுத்து போக்குவரத்து காவலர் சதீஷ் இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தாக்குதலுக்குள்ளான ஸ்விக்கி ஊழியர் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் எனது பெயர் மோகன சுந்தரம். நான் ஸ்விக்கியில் வேலை செய்கிறேன்.

    உணவு டெலிவரி

    உணவு டெலிவரி

    நேற்று மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் உணவு டெலிவரி செய்வதற்காக ஃபன் மால் அருகே வந்து கொண்டிருந்தேன். அப்போது நேஷனல் மாடல் ஸ்கூல் பஸ் வந்தது. ஒரு பெண்ணும் பையனும் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பஸ் அந்த பெண்ணை இடித்துவிட்டு நிற்காமல் போனது. நான் உடனே பைக்கில் அந்த பஸ்ஸை துரத்தி கொண்டு போனேன்.

    இடித்து விட்டு நிற்காமல் போன பஸ்

    இடித்து விட்டு நிற்காமல் போன பஸ்

    அப்போது பஸ்ஸை நிறுத்துங்கள், ஒரு பெண்ணை இடித்துவிட்டு நிற்காமல் போகிறீர்களே என கேட்டுள்ளார். அதன் பிறகுதான் அந்த பஸ்ஸை நிறுத்தினார்கள். உடனே அங்கிருந்த போக்குவரத்து போலீஸார் ஒருவர் என்னை எதுவுமே விசாரிக்காமல் கன்னத்தில் தொடர்ந்து அறைந்தார். உடனே நேஷனல் மாடல் ஸ்கூல் பஸ்ஸை நிறுத்தும் அளவுக்கு நீ என்ன பெரிய ஆளா, நீ என்ன போலீஸா என தாக்கி எனது ஹெட்போனை பிடுங்கி எறிந்தார்.

    வண்டி சாவி, போன்

    வண்டி சாவி, போன்

    எனது மொபைல், வண்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டார். என்கிட்ட ஹாஸ்பிடடல் போக கூட காசில்ல்லை. நான்பிசினெஸ் செய்கிறேன், ஸ்டேஷனரி கடை ஒன்றை நடத்தி வருகிறேன். சாப்பாட்டுக்கு கூட காசில்லாத நிலையில்தான் ஸ்விக்கிக்கு வேலைக்கு செல்கிறேன். ஸ்விக்கில வேலை பார்க்கும் பசங்கள எல்லாம் பிஇ, பிகாம் என நிறைய படிததுள்ளார்கள்.

     கண்ணீர் பேட்டி

    கண்ணீர் பேட்டி

    நான் 6 மொழிகளை பேசுவேன். கோகுலம் பார்க்கில் ஐடி கம்பெனியில் வேலைக்கு வந்திருக்கேன். வேற வேலைக்கு போனால் குழந்தையை பார்த்துக்க முடியாது. சில நேரங்களில் கடையில் ப்ராஜெக்ட் வொர்க் செய்து தருவேன். இதனால் கம்பெனியில் வேலை செய்தால் என்னால் லீவு போட முடியாது, அதனால்தான் ஸ்விக்கியில் சேர்ந்தேன். இல்லாவிட்டால் நானும் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு வந்தேன் என கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.

    English summary
    Swiggy Employee Mohana sundaram says that He knows 6 languages and he was worked in IT company.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X