கெத்து.. வேந்தராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே ஆதரவு புத்த துறவி.. பட்டம் பெற மறுத்த பல்கலைக்கழக மாணவர்கள்!
கொழும்பு: கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முருத்தெட்டுவே ஆனந்த தேர என்ற புத்த மதத் தலைவரை வேந்தராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சில மாணவர்கள் அவரிடம் இருந்து பட்டங்களைப் பெற மறுத்துவிட்டனர். இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இலங்கையில் அமைந்துள்ள கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முருத்தெட்டுவே ஆனந்த தேர என்ற புத்த மதத் தலைவர் வேந்தராக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும், இதற்கு அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பட்டமளிப்பு விழா
இந்நிலையில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. முருத்தெட்டுவே ஆனந்த தேரவின் நியமனத்தால் ஏற்பட்ட அதிருப்தியால் இந்த பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கப்போவதாக The Faculty of Management and Finance Teachers' Association எனப்படும் நிதி ஆசிரியர் சங்கம் (FMFTA) ஏற்கனவே அறிவித்துவிட்டது.

மாணவர்கள் எதிர்ப்பு
இருப்பினும், சில மாணவர்கள் மட்டும் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். அவர்களும் கூட முருத்தெட்டுவே ஆனந்த தேரவின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். மேலும், மாணவர்கள் கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரவிடம் இருந்து தங்கள் சான்றிதழ்களைப் பெற மறுத்தும், தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

யார் இவர்
கொழும்பு பல்கலைக்கழக வேந்தராக உள்ள முருத்தெட்டுவே ஆனந்த தேர புத்த மதத் தலைவர் ஆவர். மேலும், அவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படுகிறார். இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச கடந்த மாதம் தான், முருத்தெட்டுவே ஆனந்த தேரவை வேந்தராக நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியல் நோக்கத்திற்காக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ள மாணவர்கள் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கடந்த மாதம் இலங்கை அதிபருக்குக் கடிதம் எழுதினர்.
|
வைரல் வீடியோ
இந்நிலையில் இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் விறுவிறுவேன நடந்து வரும் மாணவி ஒருவர், தனது பட்டத்தை முருத்தெட்டுவே ஆனந்த தேரவிடம் இருந்து வங்க மறுக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது,
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications