கடும் நெருக்கடி.. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா? அடுத்து யார் ஆட்சி?
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தால், அடுத்ததாக தேர்தல் நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் நீண்ட மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 9ம் தேதி முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்து பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இருந்தும், பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தரப்பில் இலங்கையில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் கொழும்புவில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு தரப்பில் இருந்து பொதுமக்களும், போராட்டக்காரர்களும் குவிந்தனர். போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுயிட்டனர்.இதனை முன்பே அறிந்த கோத்தபய ராஜபக்சே நேற்று இரவே, ராணுவ தலைமையகத்திற்கு குடும்பத்துடன் சென்று தஞ்சமடைந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து கப்பல் மூலம் மாலத்தீவுக்கு தப்பியோட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த 16 எம்.பி-க்கள் கோத்தபய ராஜபக்சேவை அதிபர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்டு, அதிபர் ஒருவர் வெளிநாடு தப்பியோடுவது இதுவே முதல்முறையாகும். இந்த நிலையில், இலங்கை சூழல் குறித்து விவாதிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இதனால் அதிபரின் பணியையும் பிரதமரே தொடர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சேவை நீக்குவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. இதனால் அடுத்த அதிபராக யார் பதவியேற்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தால், அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் அரசு அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது. இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, தேர்தல் நடத்தும் முடிவை கட்சிகள் ஒத்திவைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் தேர்தல் நடத்தினால், அதற்காகவே பெரும் தொகை செலவாகும் என்பதால், தேர்தல் நடத்தும் முடிவு எடுக்கப்படாது.












Click it and Unblock the Notifications