For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாட்டு சாணம் மற்றும் கோமியம் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரம் உயரும்.. ம.பி முதல்வர் கருத்து

Google Oneindia Tamil News

போபால்: மாட்டு சாணம் மற்றும் கோமியம் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சமீப காலங்களில் மாட்டு சாணம், கோமியம் ஆகிவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மாட்டு கோமியத்திற்கு சில நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்ற போதிலும் கூட, இதை சர்வதேச ரோக நிவாரணி என்ற அளவிற்கு எல்லாம் வதந்திகளும் பரபரப்பட்டு வருகின்றன.

ஏங்க.. கேட்சை விட்டா 3 சிக்ஸ் கொடுப்பீங்களா? ஷஹீன் அப்ரிடியை வறுத்த வருங்கால மாமனார் ஷாகித் அப்ரிடி ஏங்க.. கேட்சை விட்டா 3 சிக்ஸ் கொடுப்பீங்களா? ஷஹீன் அப்ரிடியை வறுத்த வருங்கால மாமனார் ஷாகித் அப்ரிடி

இந்த நிலையில்தான் பசுவின் கோமியம், சாணம் குறித்து மத்தியப்பிரதேச முதல்வர் பேசிய கருத்து வைரலாகி உள்ளது.

போபால்

போபால்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கால்நடை பராமரிப்பு தொடர்பாக முக்கியமான கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச அரசின் பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இதில் கலந்து கொண்டார். இந்த மீட்டிங்கில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், பசுவின் கோமியம், மாட்டு சாணம், பசு வளர்ப்பு என்பது பொருளாதார ரீதியாக பலன் அளிக்கும்.

வருமானம்

வருமானம்

தனிப்பட்ட வகையில் இதன் மூலம் ஒருவர் அதிக வருமானம் ஈட்ட முடியும். இதன் மூலம் ஒருவர் தனிப்பட்ட வகையிலும் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். அதேபோல் ஒரு நாட்டின் பொருளாதாரமும் உயர்த்த முடியும். குஜராத்தில் இது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குஜராத்தில் பசு மாடுகள் மூலம் வீட்டில் இருக்கும் பெண்கள் நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

 கவனம்

கவனம்

அதேபோல் மத்திய பிரதேசத்திலும் மக்கள் பசு வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும். கால்நடை தொடர்பான படிப்புகளை படித்தவர்கள் பசு வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும். பசு வளர்ப்பை அதிகரிக்க நாங்கள் அரசு சார்பாக இரண்டு காப்பகங்களை உருவாக்கி உள்ளோம். அதே சமயம் பசுவளர்ப்பில் அரசு மட்டுமின்றி மக்களும் கவனம் செலுத்த வேண்டும்.

சாணம் உரம்

சாணம் உரம்

இதன் சாணத்தை உரமாக பயன்படுத்தலாம். அதேபோல் சாணத்தை எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும். பிணங்களை எரிக்கும் போது மரங்களை பயன்படுத்த கூடாது. இதற்கு பதிலாக காய்ந்த சாணத்தை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

English summary
Cow dung and urine can make the economy better says MP CM Shivaraj Singh Chouhan in a meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X