13 வயசு சிறுமி.. சிக்கிய சிதம்பரம் கோயில் தீட்சிதர் - “தாயும்” உடந்தை! மேலும் ஒரு “குழந்தை” திருமணம்
கடலூர்: கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக கைதான நிலையில் மேலும் ஒரு தீட்சிதர் 13 வயது சிறுமியை திருமணம் செய்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த 2021 ஜனவரி மாதம் 13 வயது சிறுமியை நாகரத்தினம் என்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் சிறுமியின் தாய் ஒப்புதலுடன் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடலூர் ஊர்நல அலுவலர் சித்ரா காவல்நிலையத்தில் புஆரளித்து இருக்கிறார். அதன் அடிப்படையில், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இருவர் கைது
இந்த நிலையில் மாப்பிள்ளை நாகரத்தினத்தின் அண்ணன் சூர்யா தீட்சிதர் மற்றும் சிறுமியுன் தாய் தங்கம்மாள் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். குழந்தை திருமணம் செய்துகொண்ட நாகரத்தினம் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

செப்டம்பர் வழக்கு
இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 14 வயது மகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலைச் சேர்ந்த சோமசேகர தீட்சிதர் என்பவர் திருமணம் செய்து வைத்தார். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து திருமணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

சிறுமியின் தந்தை
இதில் சிறுமியின் தந்தையான சோமசேகர தீட்சிதர் கைது செய்யப்பட்டார். சிறுமியை திருமணம் செய்துவிட்டு தப்பியோடிய பசுபதி தீட்சிதரை வலைவீசி தேடிய போலீசார் பின்னர் கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது மேலும் குழந்தை திருமணவம் கண்டுபிடிக்கப்பட்டு இருவர் கைதானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடரும் புகார்
தீட்சிதர்கள் தங்கள் குடும்பங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது வழக்கம் என்றும், இவர்கள் குழந்தை திருமணத்தை தடை செய்யப்பட்டதை பொருட்படுத்துவது கிடையாது என்றும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், கணக்கு வழக்கு, தீட்சிதர்கள் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் குழந்தை திருமண விவகாரமும் பூதாகரமாகியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications