Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூரில் பள்ளிக்கு வராத மாணவருக்கு அடி, உதை.. பகீர் கிளப்பிய வீடியோ.. ஆசிரியரை கைது செய்த போலீசார்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: சிதம்பரம் நந்தனார் பள்ளியில் மாணவரை ஆசிரியர் சுப்பிரமணியம் என்பவர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வைரலானது. ஆசிரியர் சுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இடையில் சில காலம் கொரோனா குறைந்திருந்த போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இருப்பினும், 2ஆம் அலை ஏற்படவே வைரஸ் பாதிப்பு மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.

 பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் திறப்பு

இந்தச் சூழலில் 2ஆம் அலை முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகளும் முடிவெடுத்து வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் முதற்கட்டமாக தற்போது 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதர வகுப்புகளுக்கு வரும் நவம்பரில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட காலம் கழித்து பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வருகின்றனர்.

 கட்டாயப்படுத்தக் கூடாது

கட்டாயப்படுத்தக் கூடாது

அதேநேரம் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு வேக்சின் பணிகள் இன்னும் தொடங்கப்படாததால், சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், பள்ளி நிர்வாகங்களும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று கூறி கட்டாயப்படுத்தக் கூடாது என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில், கடலூரில் தனது வகுப்பிற்கு வராத மாணவர்களை ஆசிரியர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பதைபதைக்க வைக்கும் வீடியோ

பதைபதைக்க வைக்கும் வீடியோ

கடலூரில் உள்ள ஆண்கள் மேல் நிலைப் பள்ளி ஒன்றில் +2 வகுப்பு படிக்கும் மாணவர்களை ஆசிரியர் ஒருவர், தனது வகுப்புக்கு ஏன் வரவில்லை எனக்கேட்டு தடியால் கொடூரமாக அடித்து, காலால் உதைக்கும் பகீர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

 கலால் உதைக்கும் ஆசிரியர்

கலால் உதைக்கும் ஆசிரியர்

இந்நிலையில் நேற்று மதியம் +2 வகுப்பு இயற்பியல் படிக்கும் மாணவர்கள் சிலரை அந்தப் பள்ளியின் ஆசிரியர் சுப்பிரமணியன் தனது வகுப்புக்கு ஏன் வரவில்லை எனக் கேட்டு கோபத்தில் கையில் வைத்திருந்த தடியால் அடித்துள்ளார். மேலும், ஆத்திரம் தாங்காமல் கால்களாலும் எட்டி உதைத்துள்ளார். இதனை சக மாணவர்கள் தங்களது மொபைலில் வீடியோவாக பதிவு செய்து, அதனை சமூக வலைத்தளங்களில் பகரிந்துள்ளனர். பள்ளி மாணவர்களை ஆசிரியர் கொடூரமாகத் தாக்கும் இந்த பகீர் வீடியோ வைரலானது. ஆசிரியர் அடித்ததில் காயமடைந்த மாணவர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 ஆசிரியர் கைது

ஆசிரியர் கைது

அரசுப் பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் தடியால் அடித்து, காலால் உதைக்கும் இந்த நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகள் பெற்றோர் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து மாணவர்களைக் கடுமையாகத் தாக்கிய ஆசிரியர் சுப்ரமணியத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+